ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்


ஸ்பெஷல் 2
5 கேள்விகள்
5 கேள்விகள்
 
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

நயன்தாராவிடம்...

''விஜயகாந்த்தின் 'விருதகிரி' படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?''

''விஜயகாந்த் சாரின் படத்தில் நடிக்க என்னை யாரும் கேட்கவேஇல்லை. நான் தமிழில்தான் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். என்னிடம் கால்ஷீட் இருந்தால், எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைக்கும் படங்களில் கண்டிப்பாக நான் நடிப்பேன்!''

திருமாவளவனிடம்...

''விடுதலைச் சிறுத்தைகள் வந்தால் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் காங்கிரஸ் வராது என்று இளங்கோவன் சொல்லியிருக்கிறாரே?''

''விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க. கூட்டணிக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதுதான்அவரது உள்நோக்கம். அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவது போல தெரிகின்றது. தமிழக காங்கிரஸூக்கு தங்கபாலுதான் தலைவர் என்பதை மறந்து தனிப்பட்ட முறையில் பேசுவது போல் உள்ளது. அப்படிப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் இளங்கோவனா? தங்கபாலுவா என்பதே குழப்பமாக உள்ளது. இவரின் கருத்தை நான் பொருட்படுத்தவில்லை!''

5 கேள்விகள்

செங்கோட்டையனிடம்...

''அ.தி.மு.க. சார்பில் ஏன் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி தரவில்லை?''

''இப்படி வசூலிக்கும் நிதி உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேராது என்று அம்மா ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள். அதுதான் உண்மை!''

பூஜாவிடம்...

''சிங்கள நடிகர் ஒருவரை நீங்கள் காதலிப்பதாகச் சொல்கிறார்களே?''

''வெரி குட் ஜோக்! சிங்களப் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது உண்மைதான். ஆனால், அங்கே உள்ள எந்த ஹீரோவையும் நான் காதலிக்கவில்லை. காதல் எனக்குப் பிடிக்காத விஷயம். எங்க அம்மா-அப்பா சொல்ற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!''

திருநாவுக்கரசரிடம்...

''மற்ற கட்சியில் பேச்சுவார்த்தையாவது நடக்கின்றது. உங்கள் பி.ஜே.பி. யாருடன் கூட்டணி என்பதை எப்போது அறிவிக்கும்?''

''தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளோம். 6 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம். இதன் பிறகு அனைத்துக் கட்சிகளாலும் பி.ஜே.பி. கவனிக்கப்படும்!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்