ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!


ஸ்பெஷல் 2
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
 
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!

ஹீரோவாகிவிட்ட தோரணையில் மற்ற நடிகைகளை அதிகம் மோப்பம் பிடிக்கிறார் என்று கணவர் மீது புகார். இதைக் கண்காணிக்க அசிஸ்டென்ட் ஒருவரை சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறாராம் பூவானவர்!

பெரிய குடும்பத்து வாரிசு குறித்து நிறைய வதந்திகள். அநேகமாகக் கல்யாணம் வரை முத்திப் போகலாம் என்றும் சொல்கிறார்கள்!

மாஸ்கோ செல்லும் முன் அம்மாவைச் சந்தித்தார் ஒரு தோழர். இன்னொரு தோழர் என்ன முடிவு எடுப்பார் என்று கவலையுடன் கேட்டாராம் அம்மா. 'அவங்களும் நம்ம பக்கம்தான்' என்று நம்பிக்கையூட்டினாராம் தோழர்!

மும்பை விவகாரத்தைக் காரணம் காட்டி, முதல்வரின் டெல்லி வருகையைத் தள்ளிப் போடச் சொன்னாராம் பிரதமர். 'சந்திப்பு நடக்காவிட்டால் இங்கு விமர்சனங்களைத் தாங்க முடியாது' என்று சொல்லி முதல்வர் பிடிவாதமாகத் தேதி வாங்கினாராம்!

வாரிசு தலைவர் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா போக இருக்கிறார். சிகிச்சைக்கா, தொழில் நிமித்தமா என்று பட்டிமன்றம் நடக்கிறது!

மகன் தினமும் கங்கையில் நீந்தி வருவது அப்பாவுக்கு வருத்தம். சொந்தங்களுக்குச் சொல்லி கட்டுப்படுத்த, படாதபாடு படுகிறாராம்!

'பொலிட்டிக்கல் லீடர் ஆகணும்னா ஓட்டல், பார்ட்டி, டிஸ்கொதே போகக் கூடாது' என்று மகனுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார் மாஜி தத்துவப் பாடகர் அப்பா. 'சரிங்கப்பா' என்று சல்யூட் வைத்தாராம் ஹீரோ மகன்!

 
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!