ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்


ஸ்பெஷல் 2
பிட்ஸ்
பிட்ஸ்
 
பிட்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ்

ரஷ்ய அதிபர் டிமிட்ரி, கியூபா சென்று ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். இதனால், அமெரிக்காவுக்கு செம டென்ஷன். அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்தது கியூபா. இப்போது மீண்டும் இருவரும் கைகோத்திருப்பது அமெரிக்காவுக்குச் சந்தோஷமான சங்கதி இல்லை. ஃபிடல் காஸ்ட்ரோ இந்தச் சந்திப்பில் என்ன பேசினார் என்பது தெரியாத எரிச்சல். இதில் ஒபாமாவும் அடக்கம்!

இராக், ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்ததற்கு இன்று வரை புஷ் வருத்தப்படவில்லை. 'சதாம் மற்றும் தலிபான் ஆட்சிக்கு முடிவு கட்டி, பல லட்சம் பேருக்கு விடுதலை அளித்ததாக வரலாறு என்னைப் பதிவு செய்யும்' என்கிறார் நம்பிக்கையாக. 'புஷ் ஆட்சிக் காலத்தில் இராக், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 கோடி பேருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்' என்று வெள்ளை மாளிகையே அறிக்கை வெளியிட, உலக நாயகன் முகத்தில் சந்தோஷம்!

70 வருடங்களாக காமிக் உலகைக் கலக்கிய ப்ரூஸ் வொய்ன் என்ற பேட்மேன் கேரக்டரை சிம்பிளாகக் காலி பண்ணிவிட்டார் அதன் பிதா கிராண்ட் மாரிஸன். 'பேட்மேன்-ஆர்.ஐ.பி: கன்க்ளூஷன்' எனப்படும் சமீபத்திய காமிக்கில்தான் இந்தக் கூத்து. பேட்மேனைக் கடவுளாகக் கொண்டாடும் பலர் அப்செட். ''70 வருஷமா ஒரே ஆள் சாகசம் பண்றது போரடிச்சதால கொன்னுட்டேன். அப்பா ஸ்தானத்தில் இருக்கிற என்னாலதான் பேட்மேன் கொல்லப்பட்டிருக்கிறார். டோன்ட் வொர்ரி... கூடிய சீக்கிரமே வேறொருத்தர் பேட்மேனாக வருவார்!'' என்கிறார் 'கூல்' மாரிஸன்!

முன்பு சவுதியில் மெக்காவைவிட உயரமான கட்டடங்களே கிடையாது. இப்போது உயரமான கட்டடங்கள் வர ஆரம்பித்திருப்பதுதான் பிரச்னைகளின் துவக்கம் என்று புது முடிவு எடுத்திருக்கிறார் மன்னர். மெக்காவைச் சுற்றி இருக்கும், உயரமான 130 மெகா கட்டடங்களை இடித்துச் சமப்படுத்தி, அகலவாக்கில் மீண்டும் கட்டிக்கொடுப்பதுதான் புது பிளான். இதற்காக ஆயிரம் பில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஸ்கெட்ச் போட ஆரம்பித்திருக்கிறார்கள்!

 
பிட்ஸ்
பிட்ஸ்