சோனாவுக்குத் தூக்கிவாரிப் போட் டது. அந்த நிழல் நெருங்கி வந்தது. கேஷ§வலாக சிகரெட் பற்ற வைத்தது. தீக்குச்சி வெளிச்சத்தில்தான் அந்த நிழலின் நிஜம் யாரெனத் தெரிந் தது சோனாவுக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு மாநிற நடிகையின் அம்மாவோடு உணவருந்திக் கொண்டிருந்தவன்தான் அவன்.
'இன்றைய இரவு முழுக்க இந்த நாயோடுதானா!' கைகளை உயரேதூக்கி, கவர்ச்சியாகக் குமைந் தாள் சோனா. ஆனால், அந்த நிழல் என்ன நினைத்ததோ... சோனாவை சீண்டிக் கூட பார்க்கவில்லை.
''நான் சென்னை யையே உள்ளங்கைக்குள்ள வெச்சிருக்கிற புரோக்கர். நாளுக்கு நாள் கஸ்டமர்ஸ் பெரு கிட்டே போறாங்க. கைவசமுள்ள 'சரக்கு' போதலை. நீ
மும்பையில இருந்து பொண்ணுங்களை அனுப்பி வச்சா... எந்த சேதாரமும் இல்லாமல் சம்பாத்தியத்தையும் சரக்கையும் உனக்கு பத்திரமா திருப்பி அனுப்பி வச்சிடுறேன்!'' -நிழல் பேசியபோதுதான், இது துட்டு விவகாரம் என்று புரிந்தது. அப்போதைக்கு ஓகே சொல்லி அனுப்பி வைத்தாள் சோனா. நிழல் போன பின்னால் சோனாவின் பண ஆசை, நாக்கைச் சுழற்றிக் கொண்டு எழுந்தது. 'சபலக்காரர்களின் ஏக்கக் கோட்டையாக இருக்கும் சென்னையை நானே ஆளப் போகிறேன்!' என மனதுக்குள் திட்டம் வகுக்கத் தொடங்கினாள். அதன் பிறகு சோனா என்கிற சூறாவளி சென்னையை மையம் கொண்டு கரை கடந்தது முதல் இப்போது கைதாகியிருப்பது வரையிலான கதைகளை போலீஸார் பலவகையாகப் புட்டு வைக்கின்றனர் -
''மாநிற நடிகையின் அழைப்பின் பேரில்சென்னைக்கு வந்து சபலக்காரர்களின் பட்டியலை அள்ளிக்கொண்டு போன சோனா, ருசி கண்ட பூனையாக 1997-ம் ஆண்டு மறுபடியும் சென்னைக்கு வந்தாள். கைநிறைய கலர்கலராகப் பெண்கள். 'சரக்கின் விலையை கஸ்ட மர்களே ஃபிக்ஸ் பண்ணட்டும்!' என அறிவித்து அந்தத் தொழிலுக்கே புதுப் பாணியைக் கற்றுக் கொடுத்தாள் சோனா. அப்புறமென்ன... சினிமா தொடங்கி பிசினஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சோனா வலைக்குள் வந்து விழத் தொடங்கினர். கைவசமுள்ள சரக்குகளைத் தொழிலுக்கு அனுப்பிவிட்டு, காபரே ஆடப் போவது சோனாவின் ஹாபியானது. எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட ஏரியாக்களில் இருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஆட்டம் போட்டுப் பணத்தையும், கூடவே சுகத்துக்கு ஏங்கும் குடும்பஸ்தர்களையும் அள்ளிக் கொண்டு வந்தாள்.
சென்னையில் தொடங்கிய புதிதிலேயே தொழில் சக்கைப்போடு போட, லோக் கல் புரோக்கர்களான பாக்கியம், தாஜ் உள்ளிட்ட பலரையும் தனக்குப் பக்கபல மாகச் சேர்த்துக் கொண்டாள் சோனா. தன் தம்பி மோகன் ரெட்டியை தனது நிதி |