என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஆசிரியர்கள் கற்கை நன்றே!

##~##

''பெரும்பாலும் பாடத் திட்டத்தைத் தாண்டி, குழந்தைகள் சிந்திப்பது இல்லையே, ஏன்?''

''அதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. கலீல் ஜிப்ரானின் கீழ்க்கண்ட வரிகள் பலரும் அறிந்ததுதான்,

'பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்லர்;
அவர்கள்
உங்களிடமிருந்து வரவில்லை.
உங்கள் வழியாக வருகிறார்கள்!’

இந்தக் கவிதையின் அடுத்த வரிகள்தான் உங்கள் கேள்விக்கான பதில்.

'உங்கள் குழந்தைகளைத்
தயவுசெய்து
படித்த ஆசிரியரிடம்
ஒப்படைக்காதீர்கள்;
படிக்கின்ற ஆசிரியரிடம்
ஒப்படையுங்கள்!’

வெறுமனே பாடப் புத்தகங்களிலும் பாடத் திட்டங்களிலும் தேங்கிப் போய்விடாமல், புதிது புதிதாகக் கற்று தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற ஆசிரியர்தான் குழந்தைகளிடமும் புதிய சிந்தனைகளை விதைக்க முடியும்!''

- பா.அமுதா, மதுரை.

நானே கேள்வி... நானே பதில்!

''நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு அதிகாரிகள்தானே காரணம்?''

''நடந்து முடிந்த தமிழகத் தேர்தலையே எடுத்துக்கொள்ளுங்கள். இதுவரை தமிழக அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய அதே அதிகாரிகள்தான், தேர்தல் ஆணைய அதிகாரத்தின் கீழும் பணியாற்றினார்கள். முரணாகச் செயல்பட்ட அதிகாரிகள் பணி மாற்றம், இட மாற்றம் செய்யப்பட்டார்கள். சுமார், இரண்டு மாத காலங்கள் இந்த அதிகாரிகள் நேர்மையாகப் பணியாற்றவில்லையா? ஏன் இவர்களால் ஐந்து ஆண்டுகாலம் அதே வேகத்துடனும் நேர்மையுடனும் பணியாற்ற முடியவில்லை?''

- இள.தொல்காப்பியன், வேதாரண்யம்.

''சத்தியமூர்த்தி பவன்..?''

''ஏதோ தான் நடத்தும் கையேந்திபவன் ரேஞ்சுக்கு, தங்கபாலு டீலிங் செய்வதுதான் ஷேம் ஷேம் பப்பி ஷேம்!''

- தாமு, தஞ்சாவூர்.

'' 'சொன்னதைச் செய்வோம்’ - தி.மு.க சரி. 'சொல்லாததைச் செய்வோம்’?''

''தேர்தல் கமிஷன்!''

- பா.சிந்து, வேலூர்