மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

உண்மை தெரிந்தது சொல்வேன்- மூன்று தொகுதிகள்
வெளியீடு: கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-17.   
விலை:

விகடன் வரவேற்பறை

600

விகடன் வரவேற்பறை

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதியுள்ள தலையங்கங்களின் தொகுப்பு. மூன்று தொகுப்புகளிலும் உள்ள 231 கட்டுரைகள், சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளைப் பேசுகிறது. 2007 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்த தலையங்கங்கள் ஈழப் பிரச்னை, போபர்ஸ் பிரச்னை, நந்திகிராம் பிரச்னை என தேசிய, சர்வதேச அளவிலான அம்சங்களையும் சமகாலத் தமிழக அரசியல் நிகழ்வுகளையும் விமர்சிக்கின்றன. இரண்டாண்டுகால வரலாற்றுப் போக்குகளை அறிந்துகொள்ளவும் விவாதிக்கவும் உதவும் கட்டுரைகள்!

பூக்கள் முதல் பூகம்பம் வரை!
http://rpsubrabharathimanian.blogspot.com/

விகடன் வரவேற்பறை

ழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வலைப்பூ.  வங்கதேசப் பயண அனுபவம், திருப்பூர் குறித்த பதிவுகள், உலகத் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கவிதைகள் என்று வாசிப்பு நேசிப்பு கொண்டவர்களை வளைக்கும் வலைப்பூ! இலக்கியத்தோடு நிற்காமல், ஜப்பான் பூகம்பம் போன்ற சமகால நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் சுவாரஸ்யம்!

குற்றமும் தண்டனைகளும்!
http://topics.law.cornell.edu/wex

விகடன் வரவேற்பறை

லக அளவில் நடக்கும் ஒவ்வொரு குற்றம் மற்றும் அதற்கான தண்டனைகளை விளக்கும் தளம். அபார்ஷன், கிரெடிட் கார்டு முறைகேடுகள்,  இன்டர்நெட் குற்றங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் எனப் பல பரிணாம குற்றங்களின் தண்டனை களை எளிமையாக விளக்குகிறார்கள்!

வாழ்க ஜனநாயகம்
இயக்கம்: பிரபு சௌந்தர்யன் மற்றும் கணபதி
வெளியீடு: சென்னை ஃபிலிம் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல்

விகடன் வரவேற்பறை

ன்றைய அரசியல் நிலவரத்தை அப்பட்டமாகக் கிண்டல் அடித்து விமர்சனம் செய்யும் குறும்படம். வெள்ளை, மஞ்சள், பச்சை, கறுப்பு என விதவிதமான கலர்களைக்கொண்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகின்றன. வெள்ளைக் கட்சி 'செல்போனை இலவசமாகத் தருவோம்’ என்கிறது. அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகள் அதற்கு ரீ-சார்ஜ் கூப்பன், சினிமாவில் நடிக்க இலவச வாய்ப்பு, வேட்டி - ஜட்டி என சகலத்தையும் இலவசமாக அறிவிக்கின்றன. கட்சி சார்பான தொலைக்காட்சிகள் 'தாங்களே வெற்றி பெறுவோம்’ என்று கருத்துத் திணிப்புகளை வெளியிடுகின்றன. கட்சித் தலைவர்களுக்கு முகமூடி போட்டு, அரசியல்வாதிகள் போலவே பேச வைத்து, நறுக் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்கள். சிரித்து முடிந்ததும் சிந்திக்கவும் வைப்பது படக் குழுவினருக்குக் கிடைத்த வெற்றி!

தெய்வத்திருமகன்  இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடல்கள்: நா.முத்துக்குமார்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

துளியும் உறுத்தாமல் காது மடல் வருடும் மென்மை இசை, கவிதை வரிகள் நிறைந்த ஆல்பம்! விக்ரம், ஷ்ரிங்காவின் குரலில் பாட்டி கதை சொல்லும் தொனியில் 'கதை சொல்லப் போறேன்’ பாடல். வடை, ராஜா, புலி, டைனோசர் என்று தளம் தாவித் தாவும் கதை 'சீனியர்’ குழந்தைகளையும் தலையாட்ட வைக்கிறது. சைந்தவியின் தாலாட்டுக் குரலில் உருகவைக்கும் மென்மையோ மென்மை மெலடி 'விழிகளிலே ஒரு வானவில்’ பாடல். 'பா... பா... பப்பா’ பாடல், ஒரு குழந்தைக்கே குழந்தை பிறக்கும் குதூகலம் சொல்கிறது. பாடலுக்குப் பாடல் மெருகுஏறும் ஜி.வி.பிரகாஷின் குரல் 'வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலில் அடுத்த கட்டம் தொட்டிருக்கிறது. விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே’ போன்ற க்யூட் வரிகளால் வசமாக்குகிறது 'ஆரிரோ ஆராரிரோ’ தாலாட்டு!