
இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை கொழும்பில் சற்றுமுன் தொடங்கியது. இந்திய அமைச்சர்கள், இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக மீன்வளத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை சார்பில் அமைச்சர்கள் மங்கள சமர வீரா, மஹிந்த அமர வீரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.