சென்னை மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கிவருகின்றன. பல உணவகங்களிலிருந்து மிகவும் குறைவான அளவில் மட்டுமே வருவாய் வருகிறது. இந்த நிலையில். நேற்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், கணக்கு குழுத் தலைவர் தனசேகரன்," சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகின்றன. எனவே, தினசரி 500 ரூபாய்க்குக் கீழ் வருமானம் வரும் நிலையிலுள்ள, மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதியிலுள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து எப்படிச் செயல்பட்டுவருகிறதோ, அதே போன்று அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத அம்மா உணவக பகுதிகளைப் பட்டியலிடுங்கள். அவை ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அம்மா உணவகத்தில் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் ஊழியர்களையே பணியமர்த்தலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.