Published:Updated:

'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!

'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!
News

தோழர். நேற்று துவங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. 'தோழர் எனச்சொல்லி உங்களிடம் யாராவது பேசினால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்' என போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னது தான் இந்த வார்த்தை வைரலாக காரணம். சைலேந்திரபாபு இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சைலேந்திரபாபு இதை சொல்லவில்லை. இதைச் சொன்னவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, கோவை வஉசி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 7-வது நாளான கடந்த 23-ம் தேதி அதிகாலை போராடிய மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியேறாதவர்கள்  தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். அன்றைய தினம் முழுக்க கோவையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தடியடி நடத்தப்பட்ட மறுதினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ். "மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சில அமைப்பினர் இணைந்து கொண்டனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இருக்கிறது" எனச்சொன்னவர், பேப்பரில் எழுதியிருந்த அமைப்பின் பெயர்களை படிக்க ஆரம்பித்தார்.  "மக்கள் அதிகார மையம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எப், எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ, சிபிஐ (எம்எல்) போன்ற மதவாத, இனவாத அமைப்புகள் தான் மாணவர்களோடு இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தின் போது மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் உங்களை (மாணவர்களை) அழைக்க கூடும். தோழர் என அழைத்து உங்களிடம் பேசினால் தொடர்பை துண்டியுங்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தடையை மீறி அரசே நடத்திய ரேக்ளா ரேஸ், போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்த செய்தியாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அழைப்பை பார்த்தவர், திடீரென இது லைவ்வாக (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகி வருகிறதா என கேட்டார். ஆம் என்றதும் வேகமாக வெளியேறினார்.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : தி.விஜய்