Published:Updated:

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
News

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக விளையாட்டு வீரர்  மாரியப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட  20 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழக அரசு, இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தது. இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழக மருத்துவருக்கு விருது

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனிதி சாலமனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய் தடுப்பு ஆய்வு சேவைக்காக மறைந்த சுனிதி சாலமனுக்கு, இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தோனி-கோலிக்கு விருது

முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  வீரர் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனிக்கும் பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், கிரிக்கெட், பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன்  சேகர் நாயக், கேரளாவைச் சேர்ந்த களரி பயிற்றுநர் மீனாட்சி அம்பாள் ஆகியோருக்கும் பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.