பாகிஸ்தானில் நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் துணை ஆணையாளர் ராஜா சலீம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'குழந்தையை நாய் காயப்படுத்தியுள்ளது. எனவே அது கொல்லப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர், ராஜா சலீமின் தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். 'குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஒரு வார சிறை தண்டனை முடிவடைந்துள்ளது. இதையடுத்து வழங்கப்படும் தண்டனைகள் நியாயமற்றது' என அவர் கூறியுள்ளார். மேலும் தனது நாயைக் காப்பற்ற நீதிமன்ற கதவுகளைத் தட்ட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.