
மும்பை: மும்பையிலுள்ள அந்தேரி என்ற இடத்தில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு போன்ற வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமான வெடி பொருள் கிடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து,அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சந்தேகத்திற்கு இடமான அந்த பொருளை கைப்பற்றி,சோதனை செய்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்,சந்தேகித்திற்கிடமான பொருள் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும், பீதியடையத் தேவையில்லை என்றும் கூறினார்.