Published:Updated:

சென்னைவாசிகளைக் குளிரவைத்த திடீர் கோடை மழை...!

சென்னைவாசிகளைக் குளிரவைத்த திடீர் கோடை மழை...!
News

பருவ மழை பொய்த்ததால், இந்தாண்டு தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடுமையான வெயில் நிலவி வந்தது. இதற்கிடையே, கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், சென்னையில் கொளுத்தி எடுத்த வெயிலின் தாக்கம் குறைந்து, இன்று மாலை முதல் இதமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, எழும்பூர், அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருமங்கலம், அண்ணாநகர்,சேப்பாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இதனால், அனலில் அவதிப்பட்டு வந்த மக்கள், மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், திருவள்ளூர், மதுரை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கேரளாவில், நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.