சார்லஸ்படம் : வி.செந்தில்குமார்
##~## |
சென்னை சேத்துப்பட் டில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் கண்ணாடி அறைக்குள் ஸ்குவாஷ் பந்தை நாலா பக்கமும் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது ஜோஷ்னா சின்னப்பா - சௌரவ் கோஷல் ஜோடி! இந்தியாவின் ஸ்குவாஷ் சாம்பி யனான ஜோஷ்னா, இதுவரை 10 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். அர்ஜுனா விருது வென்றவரான சௌரவ் கோஷல் ஆறு ஆண்டுகளாக தேசிய சாம்பியன். தீவிர பயிற்சிக்குப் பின் வியர்வையில் தெப்பலாக நனைந்து வந்து ரிலாக்ஸ் ஆனார்கள்.

''ஸ்குவாஷ் விளையாட்டின் சானியா மிர்சா நீங்கதான்னு சொல்றாங்களே?'' என்று ஜோஷ்னா விடம் கேட்டால், அதட்டலாகஒரு பார்வை பார்க்கிறார். ''சானியா, சாய்னாலாம் அவங்கவங்க விளையாட்டுல நிறைய சாதிச்சி இருக்காங்க. அவங்களோடு எங்களை கம்பேர் பண்ணாதீங்க!''
''ரொம்பவும் ஸ்லிம் ஆகிட்டீங்களே?''
''கேம் ஆரம்பிச்சுட்டா ஒரு செகண்ட்கூட நிக்காமத் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக் கணும். அதுக்கு உடம்பு ஃபிட்டா இருக்கணும்!'' என்கிறார் ஜோஷ்னா.
'ஜோஷ்னா, தீபிகா இருவரில் யாரைப் பிடிக்கும்’ என்று சௌரவ் கோஷலிடம் கேட்டால், ''ஜே.சி, தீபிகா ரெண்டு பேருமே இந்தியாவின் பெஸ்ட் பிளேயர்ஸ். என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரில் இவர்தான் பிடிக்கும்னு சொல்லவே முடியாது!'' என்று தப்பிக்கிறார் சௌரவ்.
''இன்னும் ஒரு வருஷத்துல உலகின் டாப் 10 வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கணும். அது மட்டும்தான் இப்போ எங்க டார்கெட்!'' என்று கோரஸாகச் சொல்லிவிட்டுக் கண்ணாடி அறைக்குள் புகுந்து அடித்து வெளுக்கத் துவங்குகிறார்கள் ஜோஷ்னாவும் சௌரவ்வும்!