Published:Updated:

பெட்டிப் படுக்கையுடன் தயார் நிலையில் பேரறிவாளன்!

பெட்டிப் படுக்கையுடன் தயார் நிலையில் பேரறிவாளன்!
News

பேரறிவாளன், வேலூர் மத்தியச் சிறையிலிருந்து வெளியே வர பெட்டிப் படுக்கையுடன் தயார் நிலையில் இருக்கிறார். பரோலில் விடுவிப்புகுறித்து அரசின் உத்தரவுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்தியச் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரை விடுதலை செய்யக்கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார். பேரறிவாளனை விடுதலைசெய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம், தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசு பரிசீலனை செய்துவருவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், பேரறிவாளனுக்கு எப்போது பரோல் வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சண்முகம், "பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன. அவரை பரோலில் விடுவிப்பதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும்" என்று கூறினார்.

அமைச்சர் சண்முகத்தின் இந்த அறிவிப்பால், பேரறிவாளன் எந்தநேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், 26 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளன், பெட்டி படுக்கையுடன் தயார் நிலையில் இருக்கிறார். தமிழக அரசின் அறிவிப்புக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவர் சேர்த்துவைத்த பொருள்கள் அனைத்தையும் அவர் கொண்டுவர உள்ளார்.