கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையொட்டி, தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். இதை கணக்கில் கொண்டு நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வழங்கி இருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.