என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

க.நாகப்பன்படங்கள் : பொன்.காசிராஜன், ஜெ.தான்யராஜு

அனுஷ்காவின் ஆட்டோ யோகா!

##~##

''சட்டைக்குத் தேவை காஜா
என் பேரு ஆட்டோ ராஜா
யாருக்கும் தூக்காதே கூஜா
ஐ யம் ஆட்டோ ராஜா!'' 

அதிரடி வார்த்தைகளால் சரவெடி வெடிக்கிறார் ஆட்டோ ராஜா என்கிற ராதா மணாளன். மூச்சுவிடாமல் ரைமிங் டைமிங்கில் பேசி அசத்தும் இந்த ஆட்டோ ராஜா, ஜெயா டி.வி-யின் 'மீட்டர் மேல காசு’ நிகழ்ச்சித் தொகுப்பாளர். மதுரை மைந்தனான இவர், இதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்தவர்.

''நிகழ்ச்சியில் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்குறீங்களே?''

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

''தலையைச் சுத்தி மூக்கைத் தொடுறதுதான் என் பாலிஸி. 'அப்பாவோட அப்பாவோட அப்பாவோட பையனோட மருமகள் உங்களுக்கு என்ன உறவு’ன்னு கேட்டா, எல்லாருக்கும் தலை சுத்தும். பதில்...  அம்மா! பக்கத்து வீட்டுக்குப் போய்ட்டு நம்ம வீட்டுக்கு வந்தா எப்படி இருக்கும்? அதுதான் என் ஸ்டைல்!''

''உங்க ஆட்டோவுல யார் சவாரி பண்ணணும்னு நீங்க ஆசைப்படுறீங்க?''’

''அனுஷ்கா, நித்யா மேனன்னு ரெண்டு தேவதைகள்ல யார் வந்தாலும் மீட்டர் போடாமலேயே சவாரி அடிக்க ரெடி. அனுஷ்காவை ஆட்டோவிலேயே யோகா சொல்லிக் கொடுக்கவெச்சு மன உளைச்சலைக் குறைக்கணும். செம ஐடியால்ல!''

''எப்பவும் ஜாலிதானா?''

''அப்படி இல்லை பாஸ்! நான் இலங்கை சக்தி எஃப்.எம்-ல வேலை செஞ்சுட்டு இருந்தப்பதான், சுனாமி வந்தது. யார் எங்கே இருக்காங்கனு தெரியலை. முகாமில் யாரெல்லாம் காணாமல் போயிட்டாங்க... யார் எங்கே பத்திரமா இருக்காங்கன்னு ஒரு நிகழ்ச்சி பண்ணேன். சிலர் அந்த இக்கட்டான தருணத்திலும் என்கிட்ட ஆட்டோகிராஃப் கேட்டாங்க. 'இப்போ கேக்குறீங்களே... உங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட என்னால முடியலை’னு நான் கலங்குறேன். 'எங்கட சாமான், உறவுகள்லாம் பறிபோயிடுச்சு. சுனாமியில உங்க கையெழுத்தாவது மிஞ்சட்டுமே’னு அவங்க உருக்கமா கேட்டப்போ மறுக்க முடியலை!''

ம்... ம்ஹும்!

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

''எனக்கு பாக்யராஜ் படங்கள்னா அவ்வளவு இஷ்டம். சமீபத்தில் ஒரு விழாவில், ' 'காஞ்சனா’ படத்துல சூப்பரா நடிச்சிருக்கே’னு பாக்யராஜ் சாரே என்னை நேரில் பாராட்டினார். இப்போ வரைக்கும் அந்த உற்சாகம் எனக்குள்ள அலைஅடிச்சுட்டு இருக்கு!

'மகதீரா’ இயக்குநர் ராஜ்மௌலி இயக்கும் 'வெள்ளைக் காகிதம்’ படத்தில் ஹீரோயினுக்கு அண்ணன், அண்ணியா என் கணவர் சேத்தனும் நானும் ஜோடியாவே நடிக்கிறோம். உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா... என் கணவர் 'ம்’னு சொன்னாத்தான் ஒரு புராஜெக்ட்ல நான் நடிப்பேன். 'ம்ஹும்’னு சொன்னா, நடிக்க மாட்டேன். ஆனா, அவர் 'ம்ஹூம்னு’ சொல்லவே மாட்டாரே!''- கலகலவெனச் சிரிக்கிறார் தேவதர்ஷினி.

லார்டு கிருஷ்ணா... மது அருந்தலாமா?

ன் டி.வி. 'அத்திப்பூக்கள்’ சீரியலில் சித்தர் தாத்தா, விஜய் டி.வி. 'மகான் சாய்பாபா’ சீரியலில் மகள்ஹாபதி என்று புராண வலம் வரும் ஸ்ரீஹரி, இதற்கு முன் பல

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

படங்களில் கிருஷ்ணர், விஷ்ணு, குபேரன், நாரதராக நடித்திருக்கிறார்.  

''ஒரு முறை மதுரையில் அஸ்வத்தாமா டிராமா போட்டோம். நாடகம் முடிஞ்சதும் ஒரு சர்தார்ஜி 'லார்டு கிருஷ்ணா’னு சொல்லிட்டே என் கால்ல விழுந்துட்டாரு. எனக்குக் கூச்சமாப்போச்சு. ஆனா, ஆசீர்வாதம் வாங்கிய பிறகுதான் எழுந்தார். வேலை எல்லாம் முடிச்சுட்டு, ஒயின் ஷாப் போனா, அங்கே அதே சர்தார்ஜி. 'லார்டு கிருஷ்ணா... மது அருந்தலாமா?’னு அதிர்ச்சியாக் கேட்டார்.

இப்படித் தொடர்ந்து நிறைய சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால, தெய்வீக கேரக்டர்களில் நடிக்கும் நம்மை ரசிகர்கள் கிட்டத்தட்ட தெய்வமாகத்தான் பார்க்குறாங்க. இனிமே, மதுவை நினைச்சுக்கூடப் பார்க்கக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அதுக்கப்புறம் நான் மதுவைத் தொடவே இல்லை!'' என்று சிலிர்க்கிறார் ஸ்ரீஹரி.

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

ரீல் ரியல் நல்ல பொண்ணு!

'திருமதி செல்வம்’, 'செல்லமே’ சீரியல்களில் கலாய்க்கும் காவ்யவர்ஷினிக்கு கலைச் சேவையில் இது 10-வது ஆண்டு. காம்பியரிங், ஆர்கெஸ்ட்ரா பாடகி, டான்ஸர் என்று சகல தளங்களிலும் கால் பதித்த பெருமை மிளிர்கிறது அம்மணியின் வார்த்தைகளில். இந்த 25 வயதில் காவ்யாவுக்கு இதுவரை ஒரு காதல் தூதுகூட வந்தது இல்லையாம்!

''சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச புதுசுல நெகட்டிவ் ரோல்களில் நடிச்சுட்டு இருந்தேன். ஆனா, எங்கேயும் எப்போதும் எல்லாரும் அன்லிமிடெட் சாபங்களை வாரி வழங்கிட்டு இருந்தாங்க. இன்னும் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம்கூட நடக்கலை. அதுக்குள்ள ஏன் இந்த ரிஸ்க்’னு அதுக்கப்புறம் நான் நல்ல பிள்ளை கேரக்டரில் மட்டுமே நடிக்க ஆரம்பிச்சேன். இப்போ ரீல்லயும் ரியல்லயும் நான் நல்ல பொண்ணு!''