Published:Updated:

மருதமலைக் கோயில் படிக்கட்டுகளில் தூக்கி வீசப்பட்ட பொருள்கள்... அலட்சியமா, அரசியலா! - பின்னணி என்ன?

மருதமலைக் கோயில்
News
மருதமலைக் கோயில்

கோவை மருதமலைக் கோயில் படிக்கட்டுகளில் பழைய பொருள்கள் தூக்கி வீசப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.

Published:Updated:

மருதமலைக் கோயில் படிக்கட்டுகளில் தூக்கி வீசப்பட்ட பொருள்கள்... அலட்சியமா, அரசியலா! - பின்னணி என்ன?

கோவை மருதமலைக் கோயில் படிக்கட்டுகளில் பழைய பொருள்கள் தூக்கி வீசப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.

மருதமலைக் கோயில்
News
மருதமலைக் கோயில்

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பக்தர்கள் சென்றிருந்தபோது, ராஜகோபுரம் படிகட்டுகளில் பழைய பொருள்களைத் தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மருதமலைக் கோயில்
மருதமலைக் கோயில்

“பொருள்களை இப்படித் தூக்கி வீசுவதால், கோயில் கிரானைட் படிகட்டு உடையும் அபாயம் இருக்கிறது. திருக்கோயில் நிர்வாகத்தினர் மிகவும் அலட்சியமாகச் செயல்படுகின்றனர்” என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் பகிரப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கோயில் வட்டாரத்தினர், “பொதுவாக, கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான தேவையற்ற பொருள்களை ஸ்டாக் லிஸ்ட் எடுத்து, ஆணையர் அனுமதி வாங்கி, முறையாக ஏலம்விட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட ஏலம் எடுத்தவர்கள் இரும்பு, அலுமினியம், வெங்கலம், பித்தளை எனத் தனித்தனியாக வகைப்படுத்துவார்கள்.

மருதமலைக் கோயில்
மருதமலைக் கோயில்

அதன் பிறகு  எடை போட்டு அதற்கான தொகையை திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அதன் பிறகு, மேல் அதிகாரியின் ஒப்புதல் பெற்று அவர்களின் முன்னிலையில்தான் பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

இரவு 7:30 மணிக்கு மேல் பக்தர்கள் கீழேயிருந்து மேலே செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பே இரண்டு நாள்களில் நள்ளிரவு நேரத்தில் இரும்பு, செம்பு, பித்தளை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பொருள்கள் எடுத்துச் செல்லும் பணியை ஏலம் எடுப்பவர்கள்தான் செய்ய வேண்டும்.

மருதமலை
மருதமலை

இதில் பூசாரி, முடிதிருத்தும் கலைஞர் எனக் கோயில் சம்பந்தப்பட்ட பணியாளர்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். எனவே, இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அரசு நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து மருதமலை கோயில் செயல் அலுவலர் ஹர்சினி கூறுகையில்,  “அ.தி.மு.க-வினர்தான் அந்த வீடியோவை எடுத்தனர். ஓர் அறையில் 25 ஆண்டுக்கால குப்பைகள் போடப்பட்டிருந்தன. அவைதான் சுத்தப்படுத்தப்பட்டன. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இதைப் பரப்பிவருகின்றனர். படிக்கட்டையெல்லாம் சேதப்படுத்தவில்லை.

சின்னச் சின்னப் பொருள்களைத்தான் வீசினர். அந்த நேரத்தில் மக்களுக்கு அந்த வழியைத் தடைசெய்துவிட்டோம். எந்த இரும்புப் பொருளாக இருந்தாலும், அதை மத்திய அரசின் நிறுவனமான  எம்.எஸ்.டி.சி மூலம் ஏலம்விடலாம் என ஆணையர் சுற்றறிக்கை கொடுத்திருக்கிறார்.

அதன்படி எம்.எஸ்.டி.சி மூலம் ஏலம்விட்டு அவர்கள்தான் எடுத்துச் சென்றிருக்கின்றனர். பகல் நேரத்தில் ஏராளமான கார்கள் செல்லும். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இரவு நேரத்தில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை முறையாக எடைபோட்டு, எல்லாவற்றையும் வீடியோ பதிவுசெய்திருக்கிறோம்.

எடுக்கப்பட்ட பொருள்கள் விவரம்
எடுக்கப்பட்ட பொருள்கள் விவரம்

பித்தளை உள்ளிட்ட பொருள்களுக்குத் தனி அறை இருக்கிறது. இதில் இற்றுப்போன இரும்பு பீரோ, பழைய நெய் டின்கள்தான் இருந்தன. தவறுகளைத் தட்டிக் கேட்பதையே சிலர் தவறு என நினைத்து, காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறுகளைப் பரப்புகின்றனர்” என்றார்.