Published:Updated:

நெல்லை: ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

தற்கொலை
News
தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த பெண், ஒன்றரை வயது குழந்தையுடன் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Published:Updated:

நெல்லை: ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

வீட்டில் தனியாக இருந்த பெண், ஒன்றரை வயது குழந்தையுடன் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை
News
தற்கொலை

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், மகேந்திரன். பால் வியாபார்ம் செய்து வரும் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் அகிலா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் குழந்தையுடன் தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட பிரவீனா
தற்கொலை செய்துகொண்ட பிரவீனா

மகேந்திரனும் அவரின் குடும்பத்தினரும் பகல் நேரங்களில் தோட்டப் பணிக்காகச் சென்று விடுவார்கள். அதனால் வீட்டில் குழந்தையுடன் தனியாக இருக்கும் பிரவீனா, அருகில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வார். மாலையில் மீண்டும் கணவனின் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், தாய் வீட்டுக்குச் சென்ற பிரவீனா குழந்தையுடன் இருந்துள்ளார். அவரின் பெற்றோர் தோட்டப்பணிக்காக வெளியில் சென்றுள்ளனர். வேலை முடிந்து பிரவீனாவின் தந்தை முத்துப்பாண்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்படாமல் திறந்து கிடந்திருக்கிறது. உள்ளே சென்று பார்த்தபோது, பிரவீனா தன் குழந்தை அகிலாவுடன் ஒரே சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

உடனே பதறியவர் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் இருவரையும் கீழே இறக்கிப் பார்த்தபோது இருவரும் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவர்குளம் போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீனா குடும்ப பிரச்னைக்காக குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இருவரையும் யாராவது கொலை செய்தார்களா என்பது ஆர்.டி.ஓ.சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.