Published:Updated:

`சாப்பிட்டு முடிக்காத தாய்... சதாப்தி ரயிலை நிறுத்திய மகன்’ - வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

ரயில்
News
ரயில்

காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடிப்பதற்கு ஏதுவாக சதாப்தி ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய இளைஞரை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

`சாப்பிட்டு முடிக்காத தாய்... சதாப்தி ரயிலை நிறுத்திய மகன்’ - வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு முடிப்பதற்கு ஏதுவாக சதாப்தி ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய இளைஞரை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
ரயில்
News
ரயில்

புதுடெல்லி - போபால் சதாப்தி ரயிலில் தன் தாயுடன் டெல்லியைச் சேர்ந்த மணீஷ் அரோரா என்பவர் கடந்த பயணம் செய்தார். ரயிலில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அவரின் தாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, மதுரா ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. மணீஷ் அரோராவும் அவரின் தாயும் மதுராவில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அங்கு இறங்கவில்லை. ரயில் புறப்பட்டுச் செல்லும்போது, அவர் ரயிலின் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுத்தார். அதனால் ரயில் நின்றது. அந்த நபரை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.

ரயில்
ரயில்

“அந்த நபரின் தாய் சாப்பிட்டு முடிப்பதற்குள் மதுரா ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தது. ஆனால், அங்கு இறங்க வேண்டிய அவர்கள் இறங்கவில்லை. அம்மா சாப்பிட்டு முடிக்கட்டும் என்பதற்காக அந்த நபர் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளார். அதை அவரே ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவரின் அம்மாவுடன் அவர் சென்றுவிட்டார். ஆனாலும், குறிப்பிட்ட நாளில் ரயில்வே மாஜிஸ்திரேட் முன்பாக அவர் ஆஜராகி அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவர் சிறை செல்ல நேரிடும்” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் மிகவும் அவசரமான நேரத்தில் மட்டுமே ரயில்களில் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுக்கும் நிகழ்வுகள் நடைபெறும். ஆனால், தேவையில்லாமல் சிலர் அபாயச்சங்கிலியைப் பயன்படுத்துவது உண்டு. வடக்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு ஆறு மாதங்களில் மட்டும் தேவையில்லாமல் ரயில்களில் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுத்த சம்பவங்களின் எண்ணிக்கை 650-யைத் தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்
ரயில்

“நண்பர்களோ, உறவினர்களோ ரயில் நிலையம் வந்து சேருவதற்கு தாமதம் ஏற்பட்டால், சிலர் அபாயச்சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துகிறார்கள். இது ஒரு கிரிமினல் குற்றம். இதுபோல ரயிலை நிறுத்துவதால் ரயில் தாமதமாகச் சென்று பலருக்கும் சிரமங்கள் ஏற்படும். அது மட்டுமல்ல, மற்ற ரயில்களின் பயணத்தையும் அது பாதிக்கும். எனவே, தேவையில்லாமல் ரயிலின் அபாயச்சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதை பயணிகள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.