Published:Updated:

"தொகுதிக்கு ஒரு ஜல்லிக்கட்டு வேண்டும்!"- கோரிக்கை வைக்கும் மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள்

ஜல்லிக்காட்டுக் காளையுடன் வந்த பெண், சிறுமி
News
ஜல்லிக்காட்டுக் காளையுடன் வந்த பெண், சிறுமி

ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொகுதிக்கு ஒன்று என்று நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாடுவளர்ப்போர் மற்றும் மாடுபிடிக்கும் வீரர்கள் ஆகியோர் சேர்ந்து அரசுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

Published:Updated:

"தொகுதிக்கு ஒரு ஜல்லிக்கட்டு வேண்டும்!"- கோரிக்கை வைக்கும் மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொகுதிக்கு ஒன்று என்று நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மாடுவளர்ப்போர் மற்றும் மாடுபிடிக்கும் வீரர்கள் ஆகியோர் சேர்ந்து அரசுக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

ஜல்லிக்காட்டுக் காளையுடன் வந்த பெண், சிறுமி
News
ஜல்லிக்காட்டுக் காளையுடன் வந்த பெண், சிறுமி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது சம்பந்தமாக, திருச்செங்கோடு அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்புடைய ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், 'நம்ம திருச்செங்கோடு' அறக்கட்டளைத் தலைவர் சேன்யோ குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாடு வளர்க்கும் வீராங்கனை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் சகிதம் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்
ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்

பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடந்த போதிலும், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்ட நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மாடு பிடிக்க டோக்கன் கிடைப்பதும், மாடு களத்தில் இறங்க டோக்கன் கிடைப்பதும் இயலாத காரியமாக உள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். எனவே அந்தந்தப் பகுதிகளில், குறைந்தபட்சம் சட்டமன்றத் தொகுதிக்கு ஓர் இடத்திலாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கூட்டத்தில் பேசிய பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் பேசினோம்.

"கடந்த சில வருடங்களுக்கு முன் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்திற்குப் பின், நாட்டு மாடுகள் வளர்க்கும் ஆர்வம் பலரிடமும் பரவலாக அதிகமாகியுள்ளது. அது மட்டுமல்லாது, ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது தமிழகத்தின் தென் பகுதியில் மட்டுமே பிரசித்திபெற்ற விளையாட்டு எனத் தோற்றம் உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பர்யமாக இருந்திருக்கிறது. திருச்செங்கோட்டுச் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமப் பகுதிகளில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்கப்படுகின்றன. எனவே, திருச்செங்கோடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளைகள்
ஜல்லிக்கட்டு காளைகள்

எங்களது சார்பில் நாங்களும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். திருச்செங்கோடு பகுதியில் வரும் பொங்கல் தினத்தன்று நடக்க உள்ள ஜல்லிக்கட்டை நடத்த தமிழக முதல்வர் அனுமதிக்க வேண்டும். அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டைத் திருச்செங்கோட்டில் நடத்தக் கோரிக்கை வைக்க வேண்டும்" என்றார்கள்.

இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்த இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை அழைத்து வந்து பார்வைக்கு வைத்திருந்தனர். இன்னும் நிறைய பேர் கலந்துகொள்ள இருந்ததாகவும், திருமண முகூர்த்த தினம் என்பதால் பலர் கலந்துகொள்ள இயலவில்லை எனவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.