ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (19). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். பொங்கல் விடுமுறையையொட்டி, காயத்ரி சனிக்கிழமை தாராபுரம் வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை தாராபுரம்-மதுரை நெடுஞ்சாலையிலுள்ள உணவகத்துக்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். பின்னர், உணவகத்திலிருந்து வெளியேறியவர், சாலையை கடக்க முயன்றிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் விபத்தில் இறந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.