Published:Updated:

ஹெல்த் மிக்ஸ் Vs டெய்ரி வொயிட்னர் - அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ஆவின் அவலம்

ஆவின்
News
ஆவின்

ஆவினில் தயாரிக்காத பொருளை ஆவின் தயாரிப்பு பொருள்களுடன் சேர்த்தது அரசுமீது ஊழல் முத்திரை குத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.

ஹெல்த் மிக்ஸ் Vs டெய்ரி வொயிட்னர் - அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ஆவின் அவலம்

ஆவினில் தயாரிக்காத பொருளை ஆவின் தயாரிப்பு பொருள்களுடன் சேர்த்தது அரசுமீது ஊழல் முத்திரை குத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.

Published:Updated:
ஆவின்
News
ஆவின்

ஆவினில் தயாரிக்காத பொருளை ஆவின் தயாரிப்பு பொருள்களுடன் சேர்த்தது அரசுமீது ஊழல் முத்திரை குத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. அப்படி என்ன நடந்தது?
கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருள்கள் தொகுப்பில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான 'ஆவின்' நிறுவனத்தின் 'ஹெல்த் மிக்ஸ்' பொருளை வாங்க அனுமதி வழங்காமல் தனியார் நிறுவனத்தின் 'PRO PL என்கிற ஹெல்த் மிக்ஸ்' வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசுக்கு 48 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

ஆவின்
ஆவின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் அப்படி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக ஆவின் சார்ந்த அதிகாரிகளிடம் பேசியபோது, ''கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறை சார்பில், கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருள்கள் தொகுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற, அப்போதைய ஆவின் பொதுமேலாளர் ராஜேந்திரன் (தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்), 'ஆவின் டெய்ரி வொயிட்னர்' என்கிற ஸ்கிம்டு மில்க் பவுடரை (SMP), 'ஹெல்த் மிக்ஸ்' என பரிந்துரை செய்துள்ளது தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'ஹெல்த் மிக்ஸ்' என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய வகையில் பல்வேறு சத்துப் பொருள்களை உள்ளடக்கித் தயாரிக்கப்படுவது என்கிற நிலையில், அது போன்ற ஒரு பொருள் ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத சூழலில், கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கும் தொகுப்பில் ஆவின் டெய்ரி வொயிட்னரை 'ஆவின் ஹெல்த் மிக்ஸ்' என்று கூறி அதனை அரசு சார்பில் வழங்கிட எதன் அடிப்படையில் ராஜேந்திரன் பரிந்துரை செய்தார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, இந்தத் திட்டத்தின் பெயரால் ஆவினில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடத்த திட்டமிடப்பட்டதா? என்பதும் தெரியவில்லை.

ஆவின் நெய், தயிர் உள்ளிட்டவை
ஆவின் நெய், தயிர் உள்ளிட்டவை

மேலும் பாலில் இருந்து கொழுப்புச்சத்து, திடச் சத்துகளைப் பிரித்தெடுத்த பிறகு அதனை பவுடராக்கி சிறிதளவு சர்க்கரை சேர்க்கும்போது உருமாறும் 'டெய்ரி வொயிட்னர்' எனும் ஸ்கிம்டு மில்க் பவுடரை (SMP) அரசு வழங்கும் நலத்திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அதுவும் ஒன்றுக்கொன்று மாறுபாடான தரம், குணாதிசயம் கொண்ட பொருளை அரசு, கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கும் சத்துப் பொருள்கள் தொகுப்பில் இணைத்து வழங்க பரிந்துரை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார்... யார்? என்பது குறித்து விரிவான உரிய விசாரணை நடத்த தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும்'' என்கின்றனர் அதிகாரிகள்.

ஆவின்
ஆவின்

ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் இனிப்பு வழங்க ஆவினில் வாங்காமல் வெளியில் வாங்க முயற்சி நடந்தது. அது உரிய நேரத்தில் முதல்வருக்கு தெரியவர அது தடுக்கப்பட்டு, ஆவினில் வாங்கும் நிலை உருவானது. தற்போது இந்த பிரச்னையால் ஆவின் பொருள்களையே மக்கள் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. மக்களின் சந்தேகத்தைப் போக்க அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism