Published:Updated:

ஆப்கானிஸ்தானில் வகுப்பை புறக்கணிக்கும் மாணவர்கள்; மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டம்!

ஆப்கானிஸ்தான் பெண்கள்
News
ஆப்கானிஸ்தான் பெண்கள்

``பெண்களுக்கான வகுப்புகள் மீண்டும் திறக்காவிடில், நாங்கள் எங்கள் புறக்கணிப்பைத் தொடர்வோம். பாடங்களைப் புறக்கணிப்போம். கல்வியைத் தொடரமாட்டோம்.’’

Published:Updated:

ஆப்கானிஸ்தானில் வகுப்பை புறக்கணிக்கும் மாணவர்கள்; மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டம்!

``பெண்களுக்கான வகுப்புகள் மீண்டும் திறக்காவிடில், நாங்கள் எங்கள் புறக்கணிப்பைத் தொடர்வோம். பாடங்களைப் புறக்கணிப்போம். கல்வியைத் தொடரமாட்டோம்.’’

ஆப்கானிஸ்தான் பெண்கள்
News
ஆப்கானிஸ்தான் பெண்கள்

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைத் தாலிபான்கள் 2021 ஆகஸ்ட் 15-ல் கைப்பற்றினர். ஆட்சியின் அரியணையைத் தொட்டதில் இருந்து அவர்களின் அடக்குமுறை சட்டங்கள் யாவும் பெண்களைக் குறிவைத்தே ஏவப்பட்டு வருகின்றன. 

நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல பெண்களுக்குத் தடை, பெரும்பாலான வேலைவாய்ப்பு துறைகளில் பெண்கள் பணிபுரியத் தடை, ஜிம்கள், பூங்காக்களுக்குத் செல்லத் தடை எனப் பெண்களின் உரிமைகளைப் பறிக்க, பல சட்டங்கள் அடுக்கடுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் பெண்கள்
ஆப்கானிஸ்தான் பெண்கள்
ட்விட்டர்

இவையெல்லாம் போதாதென ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பயிலும் கல்லூரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டது. உடை, உடைமை எனப் பலவற்றிற்கும் தடை விதிக்கப்பட்ட போதும் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தவர்கள், தங்களின் கல்வியின் உரிமையைப் பறிக்கிறார்கள் என்றதும் பொங்கி எழ ஆரம்பித்தனர். 

அழுதது போதும், நமக்கான உரிமைகளைப் போராடிப் பெற வேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பெண்களின் இப்போராட்டத்திற்குத் தோள் கொடுக்கும் வகையில், ஆண்களும் தங்களுடைய வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

`கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது, பெண்கள் கல்விக்குத் தடை விதிக்கும்போது, ஆண்கள் நாங்கள் மட்டும் கல்வி பயில்வதென்பது அபத்தமானது. பெண்களுக்கு அவர்களின் கல்வி வாசல் திறக்கும்வரை வகுப்புகளைப் புறந்தள்ள நாங்கள் தயார்’ என அதிகாரத்துக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். 

ஆப்கானிஸ்தான் மாணவிகள்
ஆப்கானிஸ்தான் மாணவிகள்

இது குறித்து முசாமேல் என்ற மாணவர் ஒருவர் கூறுகையில், ``பெண்களுக்கான வகுப்புகளை மீண்டும் திறக்காவிடில், நாங்கள் எங்கள் வகுப்புகளின் புறக்கணிப்பைத் தொடர்வோம். பாடங்களைப் புறக்கணிப்போம். கல்வியைத் தொடரமாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

யார் வீட்டிலோ தீ எரிகிறது என்று அமர்ந்திருந்தால், நாளை அந்தத் தீயின் தணல் நம்முடைய வீட்டையும் அழிக்கக் காத்திருக்காது..!