Published:Updated:

"பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது!" - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு

ஷாஜியா மாரி
News
ஷாஜியா மாரி ( ட்விட்டர் )

``தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம். நாடு எதை எதிர்கொள்கிறதோ அதிலிருந்து பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும்." - ஷாஜியா மாரி

Published:Updated:

"பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது!" - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் பேச்சு

``தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம். நாடு எதை எதிர்கொள்கிறதோ அதிலிருந்து பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும்." - ஷாஜியா மாரி

ஷாஜியா மாரி
News
ஷாஜியா மாரி ( ட்விட்டர் )

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வியாழன் அன்று, "எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்தக்கூடாது. ஏனெனில் உலகம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுகிறது. ஏனென்றால் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் விருந்தோம்பல் செய்தது" எனத் தெரிவித்திருந்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பூட்டோ, "ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார் என்பதை நான் இந்தியாவிடம் கூற விரும்புகிறேன். ஆனால் குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார், அவர் இந்தியாவின் பிரதமர்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பூட்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க அவருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. நாடு முழுவதும், பா.ஜ.க தொண்டர்கள் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்து, பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் ஷாஜியா மாரி
பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் ஷாஜியா மாரி
ட்விட்டர்

இந்த நிலையில், சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி, “பாகிஸ்தானுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியும். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. நமது அணுசக்தி நிலை அமைதியாக இருப்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம். நாடு எதை எதிர்கொள்கிறதோ அதிலிருந்து பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மோடி ஆட்சியில் இந்து மதமும் இந்துத்துவாவும் தலைதூக்கியுள்ளன" எனத் தெரிவித்தார்.

இவரின் கருத்து இரு நாடுகளுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய பேச்சுக்கு இந்தியா தரப்பிலிருந்து பலரும் தங்கள் கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றனர்.