Published:Updated:

10 ரூபாயிலிருந்தே செடிகள், விதைகள்... பசுமை தாகம் தீர்க்கும் தோட்டக்கலை பண்ணை!

மாதவரம் தோட்டக்கலை பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
மாதவரம் தோட்டக்கலை பண்ணை

பண்ணை

10 ரூபாயிலிருந்தே செடிகள், விதைகள்... பசுமை தாகம் தீர்க்கும் தோட்டக்கலை பண்ணை!

பண்ணை

Published:Updated:
மாதவரம் தோட்டக்கலை பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
மாதவரம் தோட்டக்கலை பண்ணை

இயற்கைச் சூழலைக் கண்டால், எவ்வளவு பெரிய மன அழுத்தமும் சட்டெனக் குறைந்து, புத்துணர்வு பிறக்கும். ஒரு விதை செடியாகிப் பூப்பதையும் காய்ப்பதையும் உடனிருந்து தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அது இன்னும் அலாதியானது. இதனால்தான் நகர்ப்புறங் களில் வசிப்போர்கூட தங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து மகிழ்கின்றனர். மாடித் தோட்டம் அமைக்கும் அளவுக்கு இடம் இல்லாத வர்கள் ஒரு செடியையாவது தங்கள் வீட்டில் வளர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக, சென்னைவாசிகள் மாடித்தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர் களுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது, சென்னை மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணை. ஓர் அதிகாலை வேளையில் இப்பண்ணைக்குச் சென்றோம்.

மாதவரம் தோட்டக்கலை பண்ணை
மாதவரம் தோட்டக்கலை பண்ணை

5 ஏக்கர் பரப்பளவில் பசுமை படர்ந்து காட்சி அளிக்கிறது இப்பண்ணை. பலருடைய இல்லங்களையும் உள்ளங்களையும் அழகாக மாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான செடிகளை ஒரே இடத்தில் பார்த்ததும் பரவசம் பொங்கியது. எங்கு பார்த்தாலும் கண்களைக் குளிர்விக்கும் பச்சை நிறம்... பண்ணையைச் சுற்றிக் காட்டியவாறே இதன் செயல்பாடுகள் பற்றிப் பேச ஆரம்பித்தார் தோட்டக்கலை அலுவலர் அன்பரசு,

“1980-ல் தொடங்கப்பட்ட இந்தப் பண்ணை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி கரமாக இயங்கி வருகிறது. 70 வகையான அழகுச் செடிகள், 15 வகையான பழச்செடிகள், 15 வகையான மூலிகைச் செடிகள், ஒரு சில காய்கறிச் செடிகள் மற்றும் விதைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள நான்கு கிடங்குகள் மற்றும் நான்கு பூங்காக்களுக்கு இங்கிருந்துதான் செடிகள் செல்கின்றன (மாதரவரம்- தோட்டக்கலை பூங்கா, வண்ணாரப்பேட்டை- பாரம்பரிய பூங்கா, தேனாம்பேட்டை- செம்மொழிப்பூங்கா, கோபாலபுரம்- செங்காந்தள் பூங்கா. மாதவரம்- தோட்டக்கலை கிடங்கு, அண்ணா நகர் தோட்டக்கலை கிடங்கு, திருவான்மியூர்- தோட்டக்கலை கிடங்கு, செம்மொழிப்பூங்கா- தோட்டக்கலை கிடங்கு).

பசுமைக் குடில்
பசுமைக் குடில்

மூலிகைச் செடிகளுக்கு மவுசு அதிகம்

நேரடியாக இங்கு வர இயலாத மக்கள் கிடங்குகளிலிருந்து வாங்கிக்கொள்கின்றனர். சென்னையைப் பொறுத்தளவில் அழகு செடிகள் மற்றும் மூலிகைச் செடிகளையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆகையால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு செடிகளை அதிகமாக வைத்திருக்கிறோம். தவிர மல்லி, செம்பருத்தி, அரளி உள்ளிட்ட பூச்செடிகளும் மா, பலா, சப்போட்டா, நெல்லி, மாதுளை உள்ளிட்ட பழச்செடிகளும் இங்கு கிடைக்கின்றன. மற்ற இடங்களைக் காட்டிலும் மக்கள், இங்கே அதிகமாக வரக் காரணம் குறைவான விலையும் தரமும்தான். குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 25 ரூபாய்க்குள் இங்கே செடிகள் கிடைக்கின்றன.

மாதவரம் தோட்டக்கலை பண்ணை
மாதவரம் தோட்டக்கலை பண்ணை

செடிகள் நட செயல்முறை விளக்கம்

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் செடிகள் வழங்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. அதற்காக இங்கு வந்து மொத்தமாக வாங்குபவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. செடிகள் மட்டு மல்லாமல் காய்கறி விதைகள், உரங்கள், தொட்டிகளும் இங்கு விற்பனை செய்கிறோம்.அனைத்தும் ஒரே இடத்தில் குறைவான விலைவில் கிடைப் பதால் மக்கள் ஆர்வத்துடன் இங்கே வருகின்றனர். செடிகள், உரங்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்வதுடன் ஒரு செடியை எப்படி முறையாக நடுவது என்பதையும் இங்கே கற்றுத் தருகிறோம். உதாரணத்துக்கு, செம்மண், தேங்காய் நார்க்கழிவுகள், மாட்டு எரு ஆகிய மூன்றையும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். புதிதாகச் செடி வளர்ப்பவர்களுக்கு அதை நேரடி செயல்முறை விளக்கத்துடன் கற்றுத் தருகிறோம்.

நாற்றுகள்
நாற்றுகள்

ஆகஸ்ட் மாதம் மாடித்தோட்ட கிட்

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே விளைவித்து உண்பதை ஊக்கப்படுத்தும் விதமாகக் கடந்த ஆண்டு `மாடித்தோட்டம்’ என்ற சிறப்புத் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் `குரோபேக், தேங்காய்நார்க் கழிவு, தேவை யான உயிர் உரங்கள் மற்றும் ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய மாடித்தோட்ட தொகுப்பை அனைத்து மாவட்டங்களிலும் தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் அரசு விநியோகித்தது. சுமார் 35,000 தொகுப்புகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கித் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே இயற்கை முறையில் விளைவித்து உண்டு மகிழ்ந்தனர். அத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டுக்கான மாடித்தோட்ட கிட், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிடைக்கும். காய்கறி உற்பத்தியைத் தொடங்க ஆடிப் பட்டம் சிறப்பானது.

பசுமைக் குடிலில் நாற்றுகள்
பசுமைக் குடிலில் நாற்றுகள்

ஆடிப்பட்ட விதைப்புக்கு ஏற்றவாறு அனைத்து வகையான காய்கறி விதைகளும் இங்கே விற்பனைக்குத் தயார் நிலையில் வைத்துள்ளோம். கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய மூன்றை மட்டும் 25-லிருந்து 30 நாள்கள் ஆன செடியாக உற்பத்தி செய்து குழித்தட்டுகளில் (Grow Tray) விநியோகிக் கிறோம். இது தவிர, மற்ற காய்கறி வகைகளை உற்பத்தி செய்ய விதைகள் விற்பனை செய்கிறோம்.

மண்
மண்
மண்+உரம்
மண்+உரம்
மண்+உரம்
மண்+உரம்

கவனம் தேவை

மாடித்தோட்டம் அமைக்க விரும்பு கிறவர்கள் விதைகள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக மக்கள் எங்கு விதைகள் வாங்கினாலும் உற்பத்தி தேதியையும் காலாவதி தேதியையும் பார்க்க வேண்டும். விதைகள் காலாவதியாகி விட்டால் முளைப்புத்திறன் குறைந்துவிடும். உதிரியாக விதைகள் வாங்கும்போது அவை தரமானதா என்பதைப் பரிசோதிக்க விதைகளைத் தண்ணீருக்குள் போட்டுப் பார்க்கலாம். நல்ல விதைகள் தண்ணீருக்குள் சென்றுவிடும். தண்ணீரில் மிதந்தால் அவை தரமற்ற விதைகள்” என்று தெரிவித்தவர் இப்பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த பசுமைக் குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.

நாற்று வளர்ப்பு
நாற்று வளர்ப்பு

பசுமைக் குடில்

இங்கு 1,000 சதுர அடியில் இரண்டு பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘‘இதில் குடமிளகாய், வெள்ளரி தொடர்ச்சி யாகப் பயிரிடுகிறோம்... இவை இரண்டும் இந்தப் பகுதியில் நல்ல விளைச்சல் தருகின்றன. கோடைக்காலங்களில் கீரை வகைகளும் வெண்டையும் பயிரிடுவது வழக்கம். தவிர, இங்கு மூன்று நிழல் வலை அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 400 சதுர அடி வீதம் மொத்தம் 1200 சதுர அடி. வெயிலின் தாக்கத்தைக் குறைத்து செடி வளர்வதற்கு ஏதுவான சீதோஷ்ண நிலையைக் கொடுக்கும். நிழல் வலையைப் பொறுத்தளவில் 25 சத விகிதம், 50 சதவிகிதம், 75 சதவிகிதம் என வெவ்வேறு வகைகளில் உள்ளன. அதாவது, 75 சதவிகித நிழல் வலை என்றால் 75 சதவிகித வெயிலைத் தடுத்து, 25 சதவிகித வெயில்தான் உள்ளே போகும். வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் செடிகளை 75 சதவிகித நிழல் வலைக்குள் வைத்திருப்போம். மிதமாக வெயில் படக்கூடிய இடங்களில் வளர்க்கப்படும் செடிகளை 50 சதவிகித நிழல் வலையிலும் அதிகமாக வெயில் படும் இடங்களில் வளர்க்கப்படும் செடிகளை 25 சதவிகித நிழல் வலைக்குள்ளும் வைத்துள்ளோம்.

நாற்றுகள்
நாற்றுகள்

கோடையில் கீரை... மழைக்காலத்தில் காய்கறிகள்

நிழல் வலை அமைக்க இடவசதி இல்லாத வர்கள் கோடைக்காலத்தில் கீரை பயிரிடலாம். கீரை வகைகள் வெயிலிலும் தாக்குப்புடித்து வளரும். காய்கறிகளை மழைக்காலத்தில் விளைவிக்கலாம்” என்று தெரிவித்தவர், அடுத்ததாக மண்புழு உர தயாரிப்பு முறைகள் குறித்து விவரித்தார்.

இயற்கை உரம்
இயற்கை உரம்
தொட்டிகள்
தொட்டிகள்

மண்புழு உரம்

“மண்புழு உரம் தயாரிக்க மொத்தம் 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படுக்கையும் 4 டன் கொள்ளளவு கொண்டது. தரையில் முதலில் மணல் அதன் மேல் சிறிதளவு ஜல்லி கற்களைப் பரப்பி யுள்ளோம். அதன் மேல் மாட்டுச் சாணம், அடுத்ததாகப் பழுத்த இலைகள்... மீண்டும் மாட்டுச் சாணம், அடுத்ததாகப் பழுத்த இலைகள் என மாற்றி மாற்றிப் பல அடுக்குகள் அமைத்துள்ளோம்.

அழகு செடிகள்
அழகு செடிகள்

இவற்றின் மேலே மண்புழுக்களை விட்டு, தினமும் தண்ணீர் தெளிப்போம். எப்போதும் ஈரம் இருந்துகொண்டே இருந்தால்தான் மண்புழுக்கள் இலைகளைச் சாப்பிட்டுவிட்டு குருணை போன்ற எச்சத்தை வெளியேற்றும். இரண்டு நாள்கள் தண்ணீர் விடாமல் நிறுத்தினால் அவை காய்ந்துவிடும். அதை நாம் எடுத்து மண்புழு உரமாகப் பயன் படுத்தலாம். மண்புழு உரம் தயாரிப்பது மிகவும் எளிதானது” என்றவர், எதிர்காலத் திட்டத்தைப் பற்றிப் பேசினார்...

நாற்றுகள்
நாற்றுகள்
தோட்டக்கலை அலுவலர் அன்பரசு
தோட்டக்கலை அலுவலர் அன்பரசு

நர்சரி தொடங்க, விரிவான களப்பயிற்சி திட்டம்

``இந்தப் பண்ணையில் ஒரு விரிவான களப்பயிற்சி திட்டம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். அத்திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் மக்கள் 3 நாள்கள் இங்கேயே தங்கி இருந்து களப்பயிற்சி பெறலாம். பண்ணை நடைமுறைகளை உற்றுநோக்குவது மற்றும் தொழில்நுட்பங்களைக் விரிவாகக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும். இப்பயிற்சி யின் நிறைவில் சான்றிதழ் வழங்கலாம் எனவும் திட்டமிட்டு வருகிறோம். நர்சரி தொழிலில் ஈடுபடவும், மாடித்தோட்டம் அமைக்கவும் இந்த விரிவான களப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, தோட்டக்கலை அலுவலர்,

செல்போன்; 72005 44394