Published:Updated:

’விவசாயிகள் தினமல்ல; கறுப்பு தினம்’ - கொந்தளித்த கரும்பு விவசாயிகள்!

’விவசாயிகள் தினமல்ல; கறுப்பு தினம்’ - கொந்தளித்த கரும்பு விவசாயிகள்!
’விவசாயிகள் தினமல்ல; கறுப்பு தினம்’ - கொந்தளித்த கரும்பு விவசாயிகள்!

’விவசாயிகள் தினமல்ல; கறுப்பு தினம்’ - கொந்தளித்த கரும்பு விவசாயிகள்!

உலக விவசாயிகள் தினமான இன்று, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் விவசாயிகள் தினத்தை, கறுப்பு தினமாக அனுசரித்து குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.  

’விவசாயிகள் தினமல்ல; கறுப்பு தினம்’ - கொந்தளித்த கரும்பு விவசாயிகள்!

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தென்னரசு, "இ.ஐ.டி. சர்க்கரை ஆலை நிர்வாகமானது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 170 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் கொண்டு செல்லும் கரும்பை சரியாக எடைபோடுவதில்லை. அதனால், சர்க்கரை ஆலையில் செயல்படும் எடைமேடையை அரசே ஏற்று நடத்தவேண்டும். கரும்புக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தரவேண்டிய லாபத்தில் பங்கு தொகையான 1994-95 மற்றும் 1997-98 ஆண்டுகளின் பாக்கி தொகையினை உடனடியாக வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்குத் தெரியாமலேயே அவர்களின் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளின் கடன் பெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய தொகையை விவசாயிகளிடம் நேரிடையாக கொடுக்காமல், சிஸ்மா என்ற சங்கத்தின் மூலம் பணம் பட்டுவாடா செய்வது என்பது மத்திய, மாநில அரசுகளை ஏமாற்றும் செயல். கரும்பு விவசாயிகளுக்குத் தீராத இப்பிரச்னைகள் இருக்கும் பொழுது, நாங்கள் விவசாயிகள் தினத்தை கொண்டாடுவது அர்த்தமில்லை. எங்களை பொறுத்தவரை இன்று விவசாயிகள் தினமல்ல கறுப்பு தினம். அதனால்தான் நாங்கள் வீடுகளில் கறுப்பு கொடிகட்டி இன்று கருப்பு தினமாக அனுசரிக்கிறோம்" என்று கொந்தளித்தார். 
                             

அடுத்த கட்டுரைக்கு