Published:Updated:

பயிர் காப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்..!

இரா.மோகன்
பயிர் காப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்..!
பயிர் காப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்..!

சிகப்பு மிளகாய் பயிரிட்ட பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவிகித இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த 55 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சிவப்பு மிளகாய் விவசாயிகளுக்கு 100 சதவிகித இழப்பீடு வழங்க கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முகம்மது அலி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டப் நிர்வாகிகள் பி.கே.முருகேசன், சேதுராமு, டி.நவநீதகிருஷ்ணன், பி.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட 55 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தினை மாவட்டத் தலைவர் முத்துராமு முடித்து வைத்தார்..