Published:Updated:

`மே 3-ல் ரயில் மறியல் போராட்டம்!’ - தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் நாளில் ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

`மே 3-ல் ரயில் மறியல் போராட்டம்!’ - தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதியில் தமிழகத்துக்கான உரிமையை நிலை நாட்டுவதற்கு மொத்த தமிழகமே போர்க்கோலம் பூண்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் இருந்து வருகிறது. தமிழக மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் காவிரி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறந்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 

மத்திய அரசு இந்தப் பிரச்னையில் காலங்கடத்தும் நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கு விரோதமான மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு, வரும் மே 3-ம் தேதியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு