அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு 23.24 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்த சிறுதானிய உற்பத்தி, 2017-18-ம் ஆண்டில் 36.57 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் பரப்பளவும் அதிகரித்து வருகின்றது’ என்று பெருமையோடு கூறியுள்ளார் தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர்.

இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுதானியங்கள் பற்றிப் பேசுவதற்குக்கூட கூச்சப்பட்டவர்கள் உண்டு. ஆனால், இன்று சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுவது நாகரிகத்தின் அடையாளமாக மாறியுள்ளது. தெருவோர உணவகங்கள் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வரை சிறுதானிய உணவுகளை விரும்பி ருசிக்கின்றனர் மக்கள்.

ஊர்கூடி தேர் இழுக்கும் வகையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தொடங்கிப் பலரும் மேடைதோறும் சிறுதானிய பெருமை பேசினர். களச் செயற்பாட்டாளர்களும் முன்னோடி இயற்கை விவசாயிகளும் சத்து நிறைந்த சிறுதானியங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கக் களத்தில் இறங்கினார்கள். பசுமை விகடனும் தொடர்கள், கட்டுரைகள், சிறப்பிதழ்கள் என்று சிறுதானியங்களைத் தொடர்ந்து கொண்டாடி வருகிறது. சிறுதானியக் கருத்தரங்கு, பயிலரங்கு, உணவுத்திருவிழா... என மாநிலம் முழுக்க நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்கவே... தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் சிறுதானியப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சாதனைகளை எடுத்துச் சொல்லியே... மத்திய அரசு, உலக வங்கி என்றெல்லாம் நிதி உதவிகளைப் பெற்று, சிறுதானியச் சாகுபடியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டுவதற்குத் தமிழக அரசு முன்வரவேண்டும்.

தொடரட்டும் இந்த நல்புரட்சி; செழிக்கட்டும் விவசாயிகளின் நல்வாழ்க்கை!

- ஆசிரியர்