Published:Updated:

`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை!’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்

இந்தத் திட்டம் அடுத்த நிதியாண்டில்தான் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2018, டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்தேதியிட்டு தொடங்கப்பட்டு, இதன் முதல் தவணையாக ரூ.2,000 மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக இரண்டாவது தவணையை ஏப்ரல் ஒன்றாம் தேதியே வழங்கவுள்ளார்கள். 

`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை!’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்
`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை!’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைத் திட்டமான பி.எம்-கிஸான், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரில் நடைபெறும் இரண்டு நாள் விவசாயிகள் கான்க்ளேவ் நிகழ்ச்சியின்போது பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை!’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்

இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டப்படி 2 ஹெக்டேருக்குக் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அந்தத் தொகையை மூன்று தவணைகளாக வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டம் அடுத்த நிதியாண்டில்தான் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2018 டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்தேதியிட்டு தொடங்கப்பட்டு, இதன் முதல் தவணையாக ரூ.2,000 மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக இரண்டாவது தவணையை ஏப்ரல் ஒன்றாம் தேதியே வழங்கவுள்ளார்கள். 

`பிப்ரவரி 24-ல் தொடக்கம்; மார்ச் 31-க்குள் முதல் தவணை!’ - வேகமெடுக்கும் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்

பொதுத்தேர்தல் வரும் மே மாதத்தில் எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்தல் வாக்குகளைக் குறிவைத்து இந்த உதவித்தொகை வழங்குவது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆக, பொதுத்தேர்தல் வருமுன்பாகவே, மொத்தம் ரூ.4,000 ரூபாய், ஊக்கத்தொகை என்ற பெயரில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் வெறுப்பிலிருந்து தப்பி, அவர்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. இந்தத் திட்டத்தின் தொடங்க நாளில், நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிய வருகிறது. இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 75,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.