Published:Updated:

150 ஆண்டுகள் பழைமையான விவசாயச் சங்கம்... முறைகேடுகளால் சீரழிகிறதா?

குளம்
பிரீமியம் ஸ்டோரி
குளம்

பிரச்னை

150 ஆண்டுகள் பழைமையான விவசாயச் சங்கம்... முறைகேடுகளால் சீரழிகிறதா?

பிரச்னை

Published:Updated:
குளம்
பிரீமியம் ஸ்டோரி
குளம்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இருவப் புரத்தில் அமைந்துள்ளது பேய்க்குளம். 312 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளத்துக்குத் தாமிரபரணி ஆற்றின் ஶ்ரீவைகுண்டம் தடுப்பணையின் வடகால் வழியாகத் தண்ணீர் வந்தடைகிறது. இதன் மூலம் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சிவத்தையாபுரம், நடுவகுறிச்சி, நந்தகோபாலபுரம், சக்கம்மாள்புரம், காடோடி பண்ணை, மணக்காடு, சவரிமங்கலம் உட்பட இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேய்க்குளம் மூலம் பாசன வசதி பெற்று வருகிறார்கள்.

1872-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி விவசாயிகள் ஒன்று கூடி ‘பேய்க்குளம் நிலச்சுவான்தாரர்கள் விவசாயிகள் அபிவிருத்திச்சங்கம்’ என்ற பெயரில் தொடங்கியிருக்கிறார்கள். 1949-ம் ஆண்டு, சங்கத்தை முறைப்படி பதிவு செய்திருக் கிறார்கள். 1972-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடிய இச்சங்கம், தற்போது 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில்தான் இச்சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பும் விவசாயிகளின் நிலங்களுக்குத் தண்ணீர் செல்லாத வகையில் மடை அடைக்கப்படுவதாகவும் பகீர் குற்றச் சாட்டு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சங்க அலுவலகம்
சங்க அலுவலகம்

வழக்கு தொடர்ந்த விவசாயி கன்னிய ராஜிடம் பேசினோம். “இந்தச் சங்கம் முன்னாடி சிறப்பா செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. ஆனா, சமீபகாலமாக நிர்வாகி களோட நேர்மையற்ற செயல்பாடுகளால சீரழிஞ்சிக்கிட்டு இருக்கு. இது சம்பந்தமா யாராவது கேள்வி கேட்டா அவங்க இங்க விவசாயமே செய்ய முடியாது. ‘இறந்து போனவங்களை உறுப்பினர்கள் பட்டியல்ல இருந்து ஏன் நீக்காம வச்சிருக்கீங்க’னு நான் கேள்வி கேட்டதுனால என்னோட நிலத்துக் குப் பாசனம் கிடைக்காம செஞ்சிட்டாங்க. பேய்குளத்துல இருந்து என்னோட வயலுக்குத் தண்ணி வரக்கூடிய வாய்க்கால் மடையையே அடைச் சிட்டாங்க. என்னை மாதிரி கேள்வி கேட்ட இன்னும் சில விவசாயிங்களும் கூடப் பாதிக்கப்பட்டுருக்காங்க. இறந்துபோன உறுப்பினர்களோட பெயர்களைப் பல வருஷங்களாகியும் நீக்காம வச்சிருக்காங்க. ஆனா, ஒவ்வொரு வருஷமும் பொதுக் குழு கூட்டம் நடத்தி, தங்களோட சுய லாபத் துக்கு ஏத்தபடி தீர்மானங் களை நிறைவேத்திக்குறாங்க. இது சட்டப்படி குற்றம்.

இங்க இன்னொரு அதிர்ச்சிகரமான முறைகேடுகளும் நடந்துக்கிட்டு இருக்கு. செத்துப்போயி பல வருஷங்களான வங்களோட பெயர்களை உறுப்பினரா சேர்த்திருக்காங்க’’ என்று சொன்னவர்,

ஒரு கல்லறையின் போட்டோவை நம்மிடம் காட்டி, “சிலுவை முத்துங்கறவரோட கல்லறை இது. அவர் மறைந்த தேதி 4.1.96-னு இதுல குறிப்பிடப்பட்டிருக்கு. ஆனா, எங்க சங்கத்தோட உறுப்பினர்கள் பட்டியல்ல, சிலுவை முத்து இந்தச் சங்கத்துல சேர்க்கப் பட்ட நாள் 14.2.2001-னு குறிப்பிட்டிருக்காங்க. இதுமாதிரி என்கிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கு. நீதிமன்றத்துல சமர்ப்பிச்சு, முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவேன்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்துப் பேய்க்குளம் நிலச்சுவான்தாரர்கள் விவசாயிகள் அபிவிருத் திச் சங்கத்தின் தலைவர் குணசேகரனிடம் கேட்டபோது, “இந்தியாவிலேயே 150 வருஷமா தொடர்ந்து சிறப்பா செயல் பட்டுக்கிட்டு இருக்கக்கூடிய பழைமையான விவசாயச் சங்கங்கள் ஒன்றிரண்டுதான் இருக்கும்னு நினைக்குறேன். அதுல எங்க சங்கமும் ஒண்ணு. இது பெருமையான விஷயம். எங்க மேல சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் எல்லாமே பொய்யானவை.

குளம்
குளம்

எங்க சங்கத்துல உறுப்பினர்களாக இருந்த விவசாயிங்க யாராவது இறந்துட்டா, அதுக்கான இறப்புச் சான்றிதழை அவங்களோட குடும்பத்தைச் சேர்ந்த வங்க கொடுத்தாதான், இறந்தவங்க பெயர்களை நீக்க முடியும். அதுமாதிரி கொடுக்கப்படாதவங்களை எப்படி நீக்க முடியும். இறந்து போனவங்களோட குடும்பம் வெளியூர்கள்ல வசிக்கிறாங்க. அதனாலயும் எங்களோட கவனத்துக்கு வராம போயிடுது.

குளத்து மண்ணை, அந்தப் பகுதியில உள்ள விவசாயிங்க இலவசமா எடுத்துக்கலாம்னு அரசாங்கம் சொல்லுது. யார்கிட்ட இருந்து மண்ணுக்குப் பணம் வாங்க முடியும்? இறந்தவங்களோட பெயர்களை நீக்கியும் புதிய உறுப்பினர்கள் பட்டியலைச் சேர்த்தும் ஆவணங் களைப் பதிவு அலுவலகத்துல கொடுத்து இப்ப எங்க சங்கத்தைப் புதுப்பிச்சிருக்கோம்” என்றார்.

தூத்துக்குடி மாவட்ட சீட்டு மற்றும் சங்கங்களின் பதிவு உதவி அலுவலர் செல்வ ராணியிடம் பேசினோம். “இறந்தவர்களின் பெயர்களை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை என அந்தச் சங்கத்தைச் சேர்ந்த கன்னியராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குணசேகரன், கன்னிய ராஜ்
குணசேகரன், கன்னிய ராஜ்


சங்கத்தின் சார்பில் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியலை இணைத்து சங்கத்தின் பதிவை புதுப்பிக்க மனு மட்டுமே அளித்துள்ளார்கள். இன்னும் புதுப்பிக்கப் படவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே பதிவு நடைமுறை பின்பற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இச்சங்கத்தின் செயல்பாடுகளில் முறை கேடுகள் நடைபெறுவது உண்மையென்றால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவை களையப் பட்டு இச்சங்கம் புத்துயிர் பெற வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சங்கம் எதிர்காலத்திலும் வெற்றிநடை போட வேண்டும்.