Published:Updated:

முல்லை பெரியாறில் 152அடி நீர்தேக்க வேண்டும்; மத்திய அமைச்சரிடம் மனு அளித்த தமிழக விவசாயிகள்!

தமிழக விவசாயிகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு கேரள மாநில வனத்துறை உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான வல்லக்கடவு வனப்பாதையை சீரமைக்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

முல்லை பெரியாறில் 152அடி நீர்தேக்க வேண்டும்; மத்திய அமைச்சரிடம் மனு அளித்த தமிழக விவசாயிகள்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு கேரள மாநில வனத்துறை உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான வல்லக்கடவு வனப்பாதையை சீரமைக்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Published:Updated:
தமிழக விவசாயிகள்

​கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில் நேற்று சர்வதேச யானைகள் தின விழா நடைபெற்றது.‌ பெரியார் புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சோப்லே, இடுக்கி எம்.பி.டீன் குரியாகோஷ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாழூர் சோமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்.‌

மத்திய இணை அமைச்சரிடம் சந்திப்பு
மத்திய இணை அமைச்சரிடம் சந்திப்பு

இதில் ​யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் சிறந்த விளங்கிய வனத்துறையினருக்கு "கஜ கவுரவ்" என்ற விருதை மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் வழங்கினார்.​ இதையடுத்து பேசிய அவர், யானைகள் பாதுகாப்பில் உலக அளவில் இந்தியா முன்னணியிலும், முதலிடத்தில் உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.

​தமிழக - கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் எனவும்,​ ​அதில் பொதுமக்களின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். வன விலங்குகள் தாக்குதலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை வன உயிரின காப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டு யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உள்ளூர் மக்களுடன் கலந்து ஆலோசித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அமைதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்​.​

விவசாயிகள்
விவசாயிகள்

​உலக யானைகள் தின​த்தையொட்டி​ தமிழகத்தில் உள்ள அகஸ்தியர் மலையின் 1,197 சதுர கி​லோ ​மீ​ட்டர்​ பரப்பளவைச் மேலும் ஒரு யானைகள் காப்பகமாக நிறுவப்படும். இவை யானைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பகுதியாக இருக்கும்​. தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி , கோயம்புத்தூர், ஆனைமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் 4 யானைகள் காப்பக பகுதிகள் இருக்கும் நிலையில், தற்போது ​5 ஆவதாகவும், இந்திய அளவில் 31​ ஆ​வது யானைகள் காப்பகமாகவும் அகஸ்தியர் மலை அறிவிக்கப்பட்டிரு​க்கிறது என்றார்.

இவ்விழாவில் பங்கேற்ற அவரை, தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் தேனி மாவட்ட​த் தலைவர் சதீஸ்பாபு தலைமையில் விவசாயிகள் சந்தித்தனர். அப்போது​ ​முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்திக்கொள்ள கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்ட உச்ச​ ​நீதிமன்றம், பேபி அணையை பலப்படுத்திய பின் 152​ ​அடிக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச​ ​நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகளாகியும் பேபி அணை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இதற்கு இடையூறாக உள்ள 13​ ​மரங்களை அகற்றுவதற்கு கேரள மாநில வனத்துறை அனுமதி மறுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எனவே ​​உச்ச​ ​நீதிமன்ற தீர்ப்பின்படி பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கு கேரள மாநில வனத்துறை உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான வல்லக்கடவு வனப்பாதையை சீரமைக்க வேண்டும் ஆகிய 2​ ​கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.