Published:Updated:

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் விவசாயிகளுக்கு 40,000 கோடி வருமானம்! பிரதமர் மோடி சொல்வது உண்மையா?

பிரதமர் மோடி

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் விவசாயிகளுக்கு 40,000 கோடி வருமானம்! பிரதமர் மோடி சொல்வது உண்மையா?

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Published:Updated:
பிரதமர் மோடி

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் ஈஷா யோக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ``காற்று மாசைக் குறைக்கும் வகையில் பெட்ரோலில், 10 சதவிகிதம் எத்தனால் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைந்ததோடு, விவசாயிகளுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது’’ எனத் தெரிவித்தார். இவருடைய இந்தப் பேச்சு, விவசாயிகளின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள மற்ற கருத்துகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

கரும்பு
கரும்பு

சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``சில வளர்ந்த நாடுகள், சுற்றுச்சூழலை அதிக அளவில் சுரண்டுகின்றன. ஆனால், காற்று மாசைத் தடுக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நாடுகள் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்துவதில்லை. பருவநிலை மாறுபாடு பிரச்னையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவே. இருப்பினும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காற்று மாசைக் குறைக்கும் வகையில் பெட்ரோலில், 10 சதவிகிதம் எத்தனால் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. 2014-ல், 1.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது, 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே சாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காற்றில் கரியமில வாயு கலப்பது, 270 கோடி கிலோ குறைக்கப்பட்டிருப்பதோடு, கச்சா எண்ணெய் கொள்முதலுக்கான நம் அந்நியச் செலாவணி 41,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனால் ஆலைகள்
எத்தனால் ஆலைகள்

மாசு ஏற்படுத்தாத மின்சாரத்துக்கு மாறுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. நம் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 40 சதவிகிதம் மாசு ஏற்படுத்தாத வகைகள் மூலம் கிடைக்கிறது. இதிலும் நிர்ணயித்த இலக்குக்கு முன்பாகவே நாம் சாதித்துள்ளோம். கடந்த 8 ஆண்டுகளில், புதிதாக 20,000 சதுர கி.மீ வனப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி 18 சதவிகிதம் வளர்ந்துள்ளது. இவ்வாறு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல வகைகளில் பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தூய்மை இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பது என, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது. மண்ணின் வளத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதனிடம் நாம் கேட்டபோது, ``பெட்ரோலில் எத்தனால் கலப்பின் அளவை அதிகரித்திருப்பதை விவசாயிகள் வரவேற்கிறோம். அதேசமயம், இதனால் விவசாயிகளுக்கு 40,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக பிரதமர் மோடி, எந்த ஒரு புள்ளி விபரமும் இல்லாமல் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதை ஏற்க முடியாது. இந்தியாவில் எவ்வளவு கரும்பு உற்பத்தி நடைபெறுகிறது? அதில் எவ்வளவு எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது? பெட்ரோலில் கலக்கப்பட்ட எத்தனாலின் மொத்த அளவு எவ்வளவு? இதனால் எந்தெந்த மாநிலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தது? உள்ளிட்ட புள்ளிவிவரங்களைத் தெளிவாகத் தெரிவித்தால்தான், பிரதமரின் பேச்சில் நம்பகத்தன்மை ஏற்படும்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி நடைபெறுவதில்லை. இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் சர்க்கரை ஆலைகள் அதிகம். அங்கு அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதில் எவ்வளவு எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டது என்பதையும் அங்குள்ள விவசாயிகளுக்கு கரும்புக்கு கூடுதல் விலையாக எவ்வளவு கிடைத்தது எனத் தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவல்களைத் தெரியப் படுத்தவில்லையென்றால். பெட்ரோலில் எத்தனால் அளவை அதிகப்படுத்தியதால், சர்க்கரை ஆலைகளும், பெட்ரோலிய நிறுவனங்கள் மட்டுமே பயன் அடைந்ததாகத்தான் அர்த்தம். இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டிலும் எத்தனால் உற்பத்தி நடைபெற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கரும்புக்குக் கூடுதல் விலை கிடைத்தால், கரும்பு உற்பத்தி அதிகரிக்கும்’’ எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளாண் பொருளியல் ஆய்வாளரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான கி.வெங்கட்ராமன், ``பெட்ரோலில் எத்தனால் அளவை அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் அதேசமயம், எத்தனால் உற்பத்தியை அதிகரித்தால், ரசாயன முறையில் கரும்புச் சாகுபடி செய்வது அதிகரிக்கும். ரசாயன இடுபொருள்களின் பயன்பாட்டால், மீத்தேன் வாயுவின் அளவு அதிகரித்து பூமி வெப்பமயமாதல் மேலும் அதிகமாகும். இந்தியாவில் வனப்பரப்பை அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி சொல்வது நகைப்புரிய முரண்பாடாகும். மத்திய அரசு உருவாக்கியதாகச் சொல்வது அனைத்துமே காடு அல்ல. தோப்புகளைத்தான் உருவாக்கியுள்ளார்கள்.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

இங்குள்ள மரங்கள், தொழிற் வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்காக வெட்டப்படும். காடுகளை உருவாக்கியதாகச் சொல்லிக்கொள்ளும் மோடி, உண்மையில் வன அழிப்பு நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறார். காப்பு காடுகளில், நாட்டின் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், வேறு எந்த ஒரு மாற்றுத் திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என வனப் பாதுகாப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்தது. அதனால் வனப்பகுதிகளுக்குள் கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் சாலைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இதில் ஓர் அதிர்ச்சிகரமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதத் திட்டங்களை செயல்படுத்த, வனப் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுவதாகத் திருத்தம் செய்துள்ளார்கள். இதன் பொருள் என்னவென்றால், தொழில் வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் காடுகளில் உள்ள மரங்களை அழித்து, கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் சாலைகள் அமைக்கவும், இந்தத் திருத்தத்தின் மூலம் வழிவகை செய்துள்ளார்கள். இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் செயலாகும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism