Published:Updated:

மேலும் ஒரு விவசாயி தற்கொலை

Vikatan Correspondent
மேலும் ஒரு விவசாயி தற்கொலை
மேலும் ஒரு விவசாயி தற்கொலை
மேலும் ஒரு விவசாயி தற்கொலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கடன் பிரச்னையால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் மேல்சந்திராபுரத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, சுமார் 3 ஏக்கரில் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், அவர் சில நாட்களாக மனமுடைந்த நிலையில், யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் விவசாயம் செய்ய வாங்கிய கடனை, திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.