Published:Updated:

'போராட்டம் தொடரும்'- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு

'போராட்டம் தொடரும்'- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு
'போராட்டம் தொடரும்'- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'போராட்டம் தொடரும்'- ஜெட்லியை சந்தித்தபின் தமிழக விவசாயிகள் அறிவிப்பு

இதனிடையே, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி திருச்சி சிவா தலைமையில் விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தனர். அப்போது, விவசாய கடன் தள்ளுபடி செய்ய ஜெட்லியிடம் கோரிக்கை வைத்ததாக திருச்சி சிவா கூறினார்.

பின் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜெட்லியை சந்தித்ததில் மன நிறைவு அடைந்துள்ளோம். எங்களை அமரவைத்து, கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். இதையடுத்து, எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.

இதையடுத்து, விவசாயிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தனர்.