Published:Updated:

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதேகோரிக்கையை வலியுறுத்து டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் நிவாரணம் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஏதும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி மீட்புக் குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல ராமநாதபுரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

-ராம், இரா.மோகன்