Published:Updated:

'விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு' - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

'விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு' - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்
'விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு' - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்
'விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு' - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

'விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பு. விவசாயத்தைக் காப்பது நமது கடமை' என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில், 'மக்கள் பாதை' அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சகாயம் ஐஏஎஸ் கலந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'டெல்லியில் போராடும் விவசாயிகள் அனைவரும் பணக்காரர்கள். அவர்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று நான் கூறியதுபோன்று, ஒரு செய்தி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்தச் செய்தி தவறானது. நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. அவர்களைக் காக்க வேண்டியது நமது கடமை' என்றார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்துகொண்டார்.

- அன்பரசன்