Published:Updated:

ரிலையன்ஸ் வசம் போகிறதா ஆவின்? கேள்விக் குறியாகும் பால் முகவர்களின் நிலை; அரசின் பதிலென்ன?

ஆவின் பால்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில், தொழிலாளர் பிரச்னை காரணமாக 4 மாதத்திற்கு மேலாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் வசம் போகிறதா ஆவின்? கேள்விக் குறியாகும் பால் முகவர்களின் நிலை; அரசின் பதிலென்ன?

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில், தொழிலாளர் பிரச்னை காரணமாக 4 மாதத்திற்கு மேலாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ஆவின் பால்

பொதுத்துறை நிறுவனங்களை அரசால் நிர்வகிக்க முடியாத போது, தனியாருக்கு விற்கப்படும். இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா என்ற தன்னுடைய ஐயப்பாட்டைக் காணொளி வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் நிறுவனத் தலைவர் சு. ஆ. பொன்னுசாமி. அதில் பேசியுள்ளவற்றையும், அவரிடம் பேசியதையும் இங்கே தொகுத்துள்ளோம்.

சு,ஆ.பொன்னுச்சாமி
சு,ஆ.பொன்னுச்சாமி

``தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது.

கோவையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக 133 முகவர்களின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மளிகைக் கடைகளுக்கே நேரடியாக உரிமத்தைக் கொடுக்கப் போவதாகவும், மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யக்கூடிய உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப் போவதாகக் கோவையில் இருக்கக் கூடிய பொது மேலாளர் ராமநாதன் தெரிவித்து இருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவரின் கூற்று ஆவினின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உண்மையோ என்கின்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், சென்னையில் உள்ள அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் 6 மாதங்களுக்கு மேலாகவே தொழிலாளர்கள் பிரச்னை காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகத்திலும் பல பிரச்னைகள் நிலவி வருகின்றன.

பால் முகவர்கள் கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். இதுமட்டுமில்லாமல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில், தொழிலாளர் பிரச்னை காரணமாக 4 மாதங்களுக்கு மேலாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

நேற்று காலை ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், ஆற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 10 மணியாகியும் பால் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பால்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கும், ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கும் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாகக் கொண்டு செல்கிறோம்.

ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இந்த தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும், தமிழக அரசோ, ஆவின் பாலகமோ எடுக்கவில்லை.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒட்டு மொத்தமாகத் தூக்கிக் கொடுத்து விடும் நடவடிக்கையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற மிகப்பெரிய ஐயப்பாடு நமக்கு எழுகிறது.

ஒரு வேளை இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுமாயின், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தைப் பால் முகவர்கள் சங்கம் முன்னெடுக்கும்.

ஆவின் பால் பொருள்கள்
ஆவின் பால் பொருள்கள்

ஏற்கனவே ரிலையன்ஸில் சாயங்காலம் போய் பால் வாங்கினால், 20 ரூபாய் ஆவின் பால் 10 ரூபாய்க்குத் தருகிறார்கள். 22, 24 ரூபாய் பாலையும் 10 ரூபாய்க்குத் தருகிறார்கள். சில்லறை வணிகர்களை எல்லாம் அழித்து, அந்த நிறுவனம் மட்டுமே செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை அவர்களிடம் ஆவின் நிர்வாகம் ஒப்படைக்கப்படுமேயானால், ஒட்டு மொத்த ஆவின் நிறுவனத்தையும் கபளீகரம் செய்து விடுவார்கள் என்பதை இந்த நேரத்தில் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக ஆவின் அதிகாரிகளைக் கண்டிக்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுப்பதாக இருந்தால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு இப்படி ஒரு திட்டம் இருக்கிறதா, இல்லையா… என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.