Published:Updated:

வேளாண் சட்டங்களால் நன்மையா, தீமையா? கேள்விகளும் பதில்களும்!

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

விளக்கம்

வேளாண் சட்டங்களால் நன்மையா, தீமையா? கேள்விகளும் பதில்களும்!

விளக்கம்

Published:Updated:
விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

த்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 நாள்களைக் கடந்துவிட்டன. ஆனால், இன்றைக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா? எதுவும் புரியவில்லையே என்ற குழப்பத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். இந்நிலையில், நடுநிலை மனப்பான்மையோடு வேளாண் சட்டங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மக்களின் மனதில் எழும் கேள்விகளும்... அதற்கான விளக்கங்களும் இங்கே இடம்பெறுகின்றன.

ஏ.பி.எம்.சி (Agricultural Produce Market Committee) பஞ்சாப் மற்றும் ஹரியானாவை மட்டுமே பாதிக்கிறதா? மற்ற மாநிலங்களில் ஏன் அதிக எதிர்ப்பு இல்லை?

அந்த இரு மாநிலங்களில் ஏ.பி.எம்.சி மிகவும் பயனுள்ளதாக இருக் கிறது. பஞ்சாபில் நிலவும் கட்டமைப்பு மற்றும் பயிர் முறை காரணமாக‌ அதிகம் நுகரப்படாத நெல் பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. பசுமைப் புரட்சி காலகட்டத்தில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களை நெல் உற்பத்தி செய்யுமாறு அரசாங்கமே சொன்னது. எனவே, அரசாங்க கொள்முதல் மட்டுமே அவர்களுக்கு உறுதியான சந்தை வாய்ப்பு. பெரும்பாலான மாநிலங்களில் அரசு கொள்முதல் மையங்கள் மாநிலங்களால் நடத்தப்படுகின்றன. தானியங்கள் எஃப்.சி.ஐ (Food Corporation of India) கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன.

பஞ்சாப், ஹரியானாவில் நம் நாட்டு மொத்த உற்பத்தியில் 50 சதவிகி தத்துக்கும் மேல் உற்பத்தியாகின்றன. அவர்களது உற்பத்தி பொருள்கள் 90 சதவிகிதம் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால் அதிக கொள்முதல் மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகள் பலரும் அரசு கொள்முதல் மையங்களை மட்டுமே நம்பியுள்ளதைப் போன்று அவர்கள் கொள்முதல் மையங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்கிறார்கள்.

பஞ்சாப், ஹரியானா மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதும் உண்மை அல்ல. அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே அதைப் புரிந்து கொண்டார்கள். பீகார், உ.பி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன. நடக்கின்றன. கர்நாடகாவிலும் நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதித்தும் தமிழகத்திலும் பல இடங்களில் போராட் டங்கள் நடந்தன. இந்தச் சட்டங்களால் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? அப்படிச் சிக்கல் இருந் தால் அது, எங்கே, எப்படி, யாரைப் பாதிக்கும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

மண்டி
மண்டி

அனைத்து மாநிலங்களிலும் மார்க்கெட்டிங் கமிட்டி செயல்படுகிறதா?

வேளாண்மை என்பது அரசியல் அமைப்புபடி மாநில பட்டியலில் உள்ள விஷயமாக இருப்பதால் (ஆம், இன்னும்...) மாநிலங்களே முடிவுகளை எடுக்க முடியும். பீகார், ஒடிசா, கேரளா போன்ற சில மாநிலங்களில் அது இல்லை. பீகாரில் மார்க்கெட்டிங் கமிட்டி அப்புறப்படுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. இதன் தாக்கத்தை எளிதாக உணரலாம்.

எடுத்துக்காட்டு கடந்த ஆண்டு பீகாரில் நெல்லுக்கு வழங்கப்பட்ட விலை, பஞ்சாபின் மார்க்கெட்டிங் கமிட்டியில் இருந்ததைவிட 1,000 ரூபாய் குறைவாக இருந்தது. ஆகவே, பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு (சட்டவிரோதமாக) பீகாரிலிருந்து ஆயிரக்கணக்கான‌ டன் நெல் கொண்டு வரப்பட்டது. அதைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள், மார்க்கெட்டிங் கமிட்டி அகற்றுவதால் விவசாயிகளுக்கு என்ன நன்மை ஏற்படும்?

மார்க்கெட்டிங் கமிட்டியின் நன்மைகள் என்ன?

இங்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை வழங்குகிறது. மார்க்கெட்டிங் கமிட்டி யார்டுகளில் உலர்த்துதல், பதப்படுத்துதல், சேமித்தல் போன்றவையும் மேற்கொள்ளப் படும். கமிட்டி பல குறைபாடுகளைக் கொண்டதுதான். பல இடங்களில் விவசாயிகளின் நன்மைக்கு எதிராகச் செயல்படுகின்றன. ஆனால், வேளாண் சட்டங்களின் நோக்கமும் உள்ளடக்கமும் சரியாக இருந்திருந்தால், அது இந்தப் பிரச்னைகளை நிவர்த்திச் செய்து மேம்படுத்த முயற்சி செய்திருக்கும். ஆனால், அவற்றைச் சீரமைக்காமல் முழுச் சந்தையையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது, அதுவும் அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு வழிவகைச் செய்கின்றன. இன்று வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள், மண்டியில் உள்ளவர்கள் (பஞ்சாபில் 6%, ஹரியானாவில் 4% கமிஷனாக எடுத்துக் கொள்கிறார்கள்) கமிஷன் முகவர்கள்.

பெரும்பாலான மாநிலங்களில் கொள்முதல் மையங்களில் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களில் உற்பத்தி அதிகளவு இருப்பதால் முகவர்களின் உதவி பெறப்படுகிறது. அவர்கள் விவசாயிகளுடன் நல்ல உறவை கொண்ட உள்ளூர் பிரஜைகளாக‌ இருக்கிறார்கள். அவசரத் தேவைக்கு நிதி உதவி செய்கிறார்கள். அறுவடை முடிந்தவுடன் அவர்களின் தலையீடு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

ஆனால், இவை ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட (Regulated) சந்தைகளில் உள்ளன என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். எனவே, புகார்கள் மற்றும் நிவர்த்திச் செய்வதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன. சில இடங்களில் விலையிலோ பிற வழிகளிலோ பிரச்னைகள் இருக்கும். அதைச் சரிசெய்ய முயல வேண்டுமே தவிர, அதற்காகக் கமிட்டிகளை அகற்றுவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை எரிப்பதற்குச் சமமான செயல்.

அனந்து
அனந்து

அதற்காக இந்தச் சந்தையை 2 பெரிய நிறுவனங்களுடன் மாற்றுவது ஒரு சிறந்த யோசனையல்ல. அவர்களது கொள்ளை லாபத்துக்கு வாசல் திறக்கும் செயல். அரசாங்கத்தால் இன்று திணிக்கப்படுவது கட்டுப்பாடற்ற சந்தை. அப்படியே இது முன்னிறுத்தப்பட்டால், பெரும்பாலான முகவர்கள் பழைய‌ ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையிலிருந்து இந்தப் புதிய கட்டுப்பாடற்ற சந்தைக்கு நகர்வார்கள். ஆனால், பெரும் முதலை கம்பெனிகள் அவர்களையும் முழுங்கிவிடும். பிறகு, இந்தப் பெரும் கம்பனிகள் தவிர, வேறு சந்தை இருக்காது. இது தமிழகம் போன்ற மார்க்கெட்டிங் கமிட்டியைச் சாராத மாநிலங்களிலும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும்.

அப்படியானால், ஏ.பி.எம்.சி இல்லாத கேரளா போன்ற மாநிலங்கள் ஏன் சத்தம் போடுகின்றன?


கேரளா ஒரு நெல் உபரி மாநிலம் அல்ல. அதன் உள்ளூர் தேவை மிக அதிகமாக உள்ளது. அது இறக்குமதியைச் சார்ந்தது. சமீப காலங்களில் இதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.‌ அது தவிர, தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் விளையும் மாநிலம். காபி, தேங்காய், ரப்பர், மிளகு, ஏலக்காய் போன்ற தோட்டப்பயிர்களே பிரதானம். ஆனால் அங்கு, அதன் ஒழுங்கு முறை எப்படி நடக்கிற‌து என்பதைக் கவனிக்க வேண்டும். காபி, தேங்காய், போன்ற தோட்டப் பயிர்கள் அனைத்துக்கும் தனித்தனி வாரியங்கள் உள்ளன. வாரியம் இல்லாத ஒரே தோட்டப்பயிர் தேயிலை மட்டுமே.

அதனால்தான் தேயிலைச் சந்தை பெரும் கம்பெனிகள் மட்டுமே நடமாடும் அரங்கமாக இருக்கிறது. அங்கு இருந்த‌ சிறு நிறுவனங்களும், சிறு பண்ணைகளும் விழுங்கப்பட்டுப் பெரிய நிறுவனங்களைப் பார்க்க முடியும். இதையே பெரும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

தனியார் நிறுவனங்கள் வருவது, விவசாயிகளுக்குச் சிறந்த விலை நிர்ணயம் செய்ய உதவும் அல்லவா?

இது தவறான கருத்து. அவர்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு நல்ல விலை கொடுக்கலாம் (ஒரு யுக்தியாக) பிறகு, தங்கள் சுரண்டல் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். விவசாயிகள் சிரமப் படுவார்கள். நாம்தான் ஏற்கெனவே ஊபர், ஓலா, கோலா போன்ற பல உதாரணங் களைப் பார்த்திருக்கிறோமே. இந்த நிலையில்தான் நாம் முன்பே பார்த்த ஒழுங்கு முறைபடுத்தப்பட்ட சந்தை யைப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கு முகவர்கள் பதிவு செய்ய வேண்டியிருக்கும் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு நிவாரண மன்றம் உள்ளது. குறைந்த விலை, தாமதங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவான விலை போன்றவை தடுக்கப்படும்.

ஏன் கட்டுப்பாடு தேவை? தடையற்ற சந்தை சிறந்ததல்லவா?

தனியாருக்குத்தான் சிறந்தது. பெரும் நிறுவனங்கள் தங்களது நிறுவன மேம்பாட்டு மற்றும் கொள்ளை லாபங்களுக்காகச் செயல் படுவதைப் பார்க்கிறோம். தடையற்ற சந்தை என்பது அவர்களின் தடையற்ற‌ ஓட்டம் மற்றும் அதிகச் சுரண்டல்கள் மற்றும் விவசாயிகளின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும். 

விவசாயப் பொருள்களுக்கு இவர்கள் வைப்பதுதான் விலை என்ற நிலைமை ஏற்படும். பெரிய பணக்கார கம்பனிகளுக்கு அரசியல் மற்றும் நிதி ஆதரவு உள்ள இந்தியா போன்ற நாட்டில், நியாயமான நடைமுறைகள் இருக்காது. அவர்களின் பாணி ‘எந்த வழியிலாவது கொள்ளை லாபம்’ என்பதாகும். இது விவசாயிகள், நுகர்வோர் இருவரையும் வெகுவாகப் பாதிக்கும். எனவே, ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

இதை அமெரிக்காவைப் பார்த்துக் காப்பி அடிக்கப்பட்டுள்ள‌ தடையற்ற சந்தையாகப் பார்க்க வேண்டும். இன்று அங்குள்ள தீர்வு - வால்மார்ட் சந்தையாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு வாடிக்கையாளர் செலுத்தும் தொகையில் 14% விவசாயிக்குச் செல்லும். இந்தியாவில் இது 40%-க்கு உள்ளது, எனவே, அமெரிக்கச் சுதந்திர சந்தையை நகலெடுத்து இங்கே தள்ள வேண்டுமா?

தடையற்ற சந்தை என்பதே ஒரு மாயை. அதிலும் கட்டுப்பாடு நம்மைச் சுற்றியே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தீர்வு காண ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட சந்தை இருப்பது விவேக மானதல்லவா?

ஒவ்வொரு தேர்தலிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை (சி 2 + 50%) செயல்படுத்துவோம். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்தவுடன் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இந்தச் சட்டங்கள் தொடர்பாக இன்னும் பேசலாம்...

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism