Published:Updated:

முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு; சாதகமா, பாதகமா?

மேட்டூர் அணை

கடந்த குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம். இந்த ஆண்டும் அதே போன்ற நிலை வராமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு; சாதகமா, பாதகமா?

கடந்த குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம். இந்த ஆண்டும் அதே போன்ற நிலை வராமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

Published:Updated:
மேட்டூர் அணை

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, ஜூன் 12 -ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு காவிரிநீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்கும் மேல் அதிகரித்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியது. மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடி. இன்னும் ஓரிரு நாள்களில் நெருங்கிவிடும் சூழல் உள்ளது. இந்நிலையில்தான் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, முன்கூட்டியே இன்று (24-ம் தேதி) மேட்டூர் அணையை மு.க.ஸ்டாலின் திறந்துள்ளார். இதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்? இவ்வளவு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுதான் முதல்முறை. இது டெல்டா விவசாயிகளுக்கு சாதகமா, பாதகமா? என்பது குறித்த விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தலைவரும், டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்,'' முன் கூட்டியே தண்ணீர் திறப்பதால் டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் முழுமையடையாது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதாலும், முன்கூட்டியே திறக்கப்படுவதாலும் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பாசனம் செய்தால், நெற்பயிர்கள் வெற்றிகரமாக விளைந்து, கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. முன்கூட்டியே குறுவை சாகுபடியை தொடங்குவதால், ஐப்பசி மாத அடைமழைக்கு முன்பாகவே குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் பயிர்கள் கனமழையில் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதால் இப்படி சில முக்கியமான நன்மைகள் இருந்தாலும் கூட, சில பின்னடைவுகள் உள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பெரும்பாலான கிராமங்களில் வாய்க்கால்கள் மோசமான நிலையில் புதர்கள் மண்டி, மண் மேடாகி கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் வயல்களுக்கு தண்ணீர் வந்து சேராது.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

வேளாண்மைத்துறை, வேளாண் சார்ந்த துறைகள் தற்போது ஆயத்த நிலையில் இருக்கிறார்களா என தெரியவில்லை. விதை, உரம் உள்ளிட்டவற்றின் தேவை ஒரே நேரத்தில் அதிகரிக்கும்போது, அவை தட்டுப்பாடின்றி வழங்க தயார்நிலையில் இருக்க வேண்டும். வேளாண், நீர்வளம், கூட்டுறவுத் துறைகளின் அரசு செயலர்கள் டெல்டா பகுதியில் மாவட்டங்கள்தோறும் வருகை தந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் பணியை துரிதப்படுத்த வேண்டும். தண்ணீரை அனைத்துப் பகுதிகளுக்கும் முறைப்படுத்தி வழங்க மாவட்டந்தோறும் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கியக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் ''என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை மாவட்டம் ராயமுண்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜீவக்குமார் ''முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படுவது டெல்டா விவசாயிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு மும்முரமாக ஈடுபடுவார்கள். ஆனால் அதேசமயம் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெற்று முடிவதற்குள் தண்ணீர் திறக்கப்படுவது, ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

தமிழக அரசு இந்த குற்றச்சாட்டை தவிர்க்க, முன்கூட்டியே மழை நிலவரத்தை அறிவியல் பூர்வமாக அறிந்து கொண்டும், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை மனதில் கொண்டும், மிகவும் சீக்கிரமாக மேட்டூர் அணையை திறக்க வேண்டியதிருக்கும் என்பதை முன் கணிப்பு செய்திருக்க வேண்டும்.

அதற்கேற்ப தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதனை செய்ய தவறிவிட்டார்கள். குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை இவற்றை தயார் நிலையில் வைப்பதோடு, வங்கிகளில் பயிர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். கடந்த குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம்.

இந்த ஆண்டும் அதே போன்ற நிலை வராமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கடைமடை வரை அனைத்து கிராமங்களிலும் உள்ள வயல்களுக்கு குறுவை சாகுபடி நிறைவு நிலைக்கு வரும் வரையிலும் தண்ணீர் சென்று சேர்கிறதா என தமிழக அரசு உறுதி செய்து அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

டெல்டா விவசாயிகள்
டெல்டா விவசாயிகள்

மூத்த பொறியாளர் வீரப்பனிடம் பேசியபோது, "மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பது மரபாக இருந்தாலும், அணையில் தண்ணீர் இருந்தால் முன்கூட்டியே திறக்கலாம். அணையைத் திறப்பதற்கு 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும். இப்போது 115 அடி தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் தாராளமாக திறக்கலாம். தண்ணீரின் வருகையை பொறுத்து விவசாயிகள் அதற்கேற்ப உழவு பணிகளைத் தொடங்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism