Published:Updated:

விவசாய மின் மோட்டாருக்கு மானியம்... அழைப்பு விடுக்கும் வேளாண் பொறியியல் துறை!

விவசாய மின் மோட்டார்
பிரீமியம் ஸ்டோரி
விவசாய மின் மோட்டார்

அறிவிப்பு

விவசாய மின் மோட்டாருக்கு மானியம்... அழைப்பு விடுக்கும் வேளாண் பொறியியல் துறை!

அறிவிப்பு

Published:Updated:
விவசாய மின் மோட்டார்
பிரீமியம் ஸ்டோரி
விவசாய மின் மோட்டார்

தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் 2022 - 23-ம் ஆண்டில் செயல்படுத்தப் படவிருக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்புத் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக, விவசாய ஆழ்துளைக் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார்களுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க மானியமாக 10,000 ரூபாய் அல்லது மின் மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவிகிதம்... இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை உள்ள மின் மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. புதிதாகப் பெறப்பட்ட விவசாய மின் இணைப்புக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் மின் மோட்டாருக்கு மாற்றாக, புதிய மின் மோட்டார் வாங்குவதற்கும் இந்த மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்.

முன்னுரிமை

இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயி கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

பயனாளர்களுக்கான தகுதி வரம்புகள்

திறன் குறைந்த பழைய மின் மோட்டாரை மாற்ற விரும்பும் விவசாயிகள்... மின் வாரியத் தின் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான குதிரைத்திறன் கொண்ட திறன்மிகு பம்பு மின் மோட்டார் வாங்க மானியம் பெறலாம். இலவச விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் மட்டு மல்லாமல், ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்த வெளி கிணறு அமைத்து கட்டண முறை திட்டத்தின் கீழ் மின் இணைப்புபெற்ற விவசாயிகளும் மின் மோட்டார் வாங்க மானியம் பெறலாம். 3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்துக்குத் தகுதி யுடையவர்கள்.

விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் மானியம் பெறுவதற்கான வழிமுறைகள்

விவசாயிகள் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வருவாய் கோட்டங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிச் செயற் பொறியாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங் களைச் சமர்ப்பித்து இணயதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பின் வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர்/ இளநிலைப் பொறியாளர் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களில் தொழில்சநுட்ப ஆய்வு மேற்கொள்வார். தொழில்நுட்ப ஆய்வின்படி மூதுரிமை (சீனியாரிட்டி) அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மின் மோட்டாரை (10 குதிரைத்திறனுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) வாங்க, விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தைத் தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

விவசாய மின் மோட்டார்
விவசாய மின் மோட்டார்

விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ டீலர்களிடமிருந்து விலைப்புள்ளி பெற்று உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியான விவசாயி களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கு தகுந்த வாறு அந்தந்த உதவி செயற்பொறியாளர் களால் விவசாயிகளுக்குப் பணி ஆணை வழங்கப்படும். விவசாயிகள் பணி ஆணையில் உள்ள மின் மோட்டார் பம்பு செட்டுகளைக் கொள்முதல் செய்து விலைப்பட்டியலை சம்பந்தப்பட்ட உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் முன்னிலையில் மின்மோட்டார் ஆழ்துளைக் கிணறு அல்லது திறந்தவெளி கிணறுக்குள் நிறுவப்பட வேண்டும்.

அதிகாரிகள் நேரில் அய்வு செய்த பின் உரிய வழிமுறையின்படி மானியம் பயனாளியின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:

அ. ஆதார் அட்டை நகல்.

ஆ. புகைப்படம்.

இ. வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஈ. சாதிச் சான்றிதழின் நகல் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்).

உ. சிறு குறு விவசாயிகான சான்றிதழ் (3 ஏக்கர் வரை நிலம் உள்ளது என வட்டாட்சியர் சான்று இணைக்கப்பட வேண்டும்).

ஊ. நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல்.

எ. மின் இணைப்புச் சான்றிதழின் நகல்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 20 சதவிகிதம் மானியம்!

வேளாண் பொறியியல் துறை மூலம் செயல் படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்கல், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம், சோலார் பம்ப் செட்டுகள் ஆகிய திட்டங்களில் வழங்கப்படும் மானியங்களிலிருந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயி களுக்குக் கூடுதலாக 20 சதவிகிதம் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத் தமிழக அரசால் 2.28 கோடி ரூபாய் வேளாண் பொறியியல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.