Published:Updated:

வேளாண்மை துறை சிறப்பாக செயல்படுகிறது! வேளாண் துறை செயலர் விளக்கம்!

வேளாண்மை துறை
பிரீமியம் ஸ்டோரி
வேளாண்மை துறை

விளக்கம்

வேளாண்மை துறை சிறப்பாக செயல்படுகிறது! வேளாண் துறை செயலர் விளக்கம்!

விளக்கம்

Published:Updated:
வேளாண்மை துறை
பிரீமியம் ஸ்டோரி
வேளாண்மை துறை

பசுமை விகடன் 10.03.22 தேதியிட்ட இதழின் ‘மரத்தடி மாநாடு’ பகுதியில், ‘உழவர் நலத்துறையா... ஊழல் வளத்துறையா...’ என்ற தலைப்பில் தமிழக வேளாண்மைத்துறை பற்றிய சில செய்திகள் இடம்பெற்றிருந்தன. அந்தச் செய்திகளை மறுத்திருப்பதோடு, கூடுதல் விளக்கங்களையும் தமிழக வேளாண்மைத் துறையின் செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ், கடிதம் வாயிலாக நமக்கு அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்திலிருந்து...

“முருங்கை சிறப்பு மண்டலமா 7 மாவட்டங்களை அறிவிச்சாங்க. அதுக்குப் பிறகு, எந்த நடவடிக்கையும் இல்லையே” என்றொரு கேள்வி, பசுமை விகடனில் எழுப்பப்பட்டுள்ளது.

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சரால் 2021-22-ம் ஆண்டு நிதியறிக்கை யில் அறிவித்தபடி முருங்கை அதிகம் சாகுபடி செய்யப்படும் தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள், முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து அரசாணை 21.01.2022 அன்று வெளியிடப்பட்டுவிட்டது.

முதற்கட்டமாக, மதுரையில் முருங்கைக் கெனச் சிறப்பு வேளாண்மை ஏற்றுமதி சேவை மையம் அமைக்கவும், இரண்டாம் கட்டமாக, முருங்கையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற் கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் தவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்,

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேவை மையம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதலும், அலுவலர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகளுக்காக ரூ.26 லட்சத்துக்கான நிதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மை
வேளாண்மை

சேவை மையம் அமைக்கும் பணிகள் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் மையம் இயங்கத் தொடங்கும். முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கருத்துக்கேட்புக் கூட்டம், பிப்ரவரி 2022-ல் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது. விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

“சொட்டு நீர்ப்பாசனத்துக்குச் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செஞ்சாங்க. அதை அமைச்சு கொடுக்குற வேலையை ஒரு சில கம்பெனிகளுக்குக் கொடுத்தாங்க. அதுக்குக் கமிஷன் 5 சதவிகிதமாம்.”

சொட்டு நீர்ப்பாசனம் தொடர்பாக விவசாயிகளின் விருப்பப் பதிவு முதல் மானிய விடுவிப்பு மற்றும் பராமரிப்பு மேற்பார்வை வரை அனைத்தும் நுண்ணீர் பாசன தகவல் மேலாண்மை அமைப்பு (MIMIS) என்ற வலைதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட 46 நுண்ணீர் பாசன நிறுவனங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்கின்றனர். பெரும்பான்மையான விவசாயிகள், முன்னோடியாகச் செயல்படும் முதல் 20 நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். வயலாய்வு, விலைப்புள்ளி தயாரித்தல், பணி ஆணை வழங்குதல், நுண்ணீர்ப்பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் மானியம் விடுவிப்பு ஆகிய அனைத்து நிலைகளும் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது, சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. விதிமுறைகளைப் பின்பற்றாத நுண்ணீர் பாசன நிறுவனங்களுக்குத் திட்ட விதிகளின் படி அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 4 நிறுவனங்களின் பதிவுத் தகுதி நிறுத்தம் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.1.76 கோடி விதிக்கப்பட்டுள்ளது. 5 நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

“வரக்கூடிய கல்வி ஆண்டுல தனியார் வேளாண் கல்லூரிகளை வெச்சுக் கல்லா கட்டுறதுக்கு ஒரு வேலை பார்த்திருக்காங்களாம். கல்லூரிகளைத் தரம் பிரிச்சு, தரத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கான சீட்டுகளை அதிகப்படுத்திக் கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம். வழக்கமா இந்த மாதிரி முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகக் குழு கூட்டத்துலதான் எடுப்பாங்களாம். முதல் தடவையா, ‘அகாடமி கமிட்டி’ மூலமா முடிவு எடுத்திருக்காங்க.”

ஒவ்வோர் ஆண்டும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் அதைச் சார்ந்த படிப்புகளுக்கு ஏறத்தாழ 40,000 மாணவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப் படுகின்றன. இதில் 4,800 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். மாணவர் களின் சேர்க்கையை அதிகப்படுத்து வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களுக்குப் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்துவது வேளாண் பல்கலைக் கழக நிர்வாகச் சட்டம் பிரிவு 23 (c) (i)-ன்படி கல்விக்குழுவின் (Academic Council) அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். முந்தைய ஆண்டிலும் (2019-ல்) இந்தக் குழுதான் இம்முடிவுகளை எடுத்துள்ளது. கல்வி சம்பந்தப்பட்ட பொருள்களை அங்கீகரிக்க அகாடமி கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு. நிர்வாகக் குழுவுக்கு இதுபற்றித் தகவலுக்காகத் தெரிவிக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேளாண்மை துறை
வேளாண்மை துறை

“வேளாண் கருவிகள் வாங்குவதற்கான மானியத்த பணமா கொடுத்தாங்க. இனி பணமா கொடுக்க மாட்டோம். பொருளாதான் கொடுப்போம். வேணும்னா வாங்கிக்கோங்க... இல்லைன்னா போங்கங்கிற மனநிலையில அதிகாரிக இருக்காங்க.”

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் ஒன்றிய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலம் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கிட இந்த இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்து தங்களுக்குத் தேவைப்படும் கருவி அல்லது இயந்திரத்தின் நிறுவனம் மற்றும் மாடல்களை வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்களின் தலையீடுகள் ஏதுமின்றித் தங்களது முழு விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

அவ்வியந்திரங்கள் அல்லது கருவிகளின் முழுத் தொகையைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத் தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வங்கி வரைவோலை அல்லது காசோலை அல்லது ரொக்கமாகவோ செலுத்தி, அதனடிப்படையில் இயந்திரங்கள் அல்லது கருவிகளைப் பெற்று, அவற்றின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

வேளாண்மை
வேளாண்மை

திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சரியாக இருப்பின், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியம் நேரிடையாகச் செலுத்தப்படுகிறது. இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பொருளாக, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, எல்லாத் திட்டங்களும் படிப்படியாகக் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயனாளிகள் / விவசாயிகள் வெளிப்படையாக, நேரடியாகக் கணினி யிலேயே பதிவுசெய்து பயன்பெறும் வகையில் பெரும்பாலான திட்டங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு, பயனாளிகள் பயன்பெறும் வகையிலேயே அமைக்கப்படும்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism