Published:Updated:

ஆந்திராவில் வெற்றிபெற்ற வேளாண் சேவை மையங்கள்…தமிழகத்தில் செயல்படுத்த முடிவு!

ஜெகன்மோகன் ரெட்டி

விவசாயிகள் இந்த மையங்களை அணுகி உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவான சேவைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்காகத் தொடுதிரை கணினிகளும் இம்மையங்களில் நிறுவப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான பாராட்டுகளைப் பெற்றதோடு, இந்த ஆண்டுக்கான விருதினை ஆர்.பி.கே திட்டம் பெற்றுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆர்.பி.கே என அழைக்கப்படும் `ரைத்து பரோஷா கேந்திரம்' (Rythu Bharosa Kendram) என்ற திட்டத்தை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். அதன்படி விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஒவ்வொரு கிராமங்களிலுமே விவசாய சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

விவசாயிகள் இந்த மையங்களை அணுகி உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவான சேவைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்காகத் தொடுதிரை கணினிகளும் இம்மையங்களில் நிறுவப்பட்டுள்ளது.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
Photo: Vikatan / Vijayakumar.M

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, `சாம்பியன் மற்றும் பார்ட்னர்ஷிப்' விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதினை ஆர்.பி.கே திட்டம் பெற்றதோடு, மிகப்பெரிய அளவிலான பாராட்டுகளையும் பெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த, தமிழக அரசும் விருப்பம் தெரிவித்துள்ளது. இம்முயற்சியின் முதற்கட்டமாக தமிழக அரசின் வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஆந்திராவிற்குச் சென்று, இந்த திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் குறித்து அங்குள்ள ஆந்திர மாநில வேளாண்துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளது.

Farmer
Farmer
AP Photo / Rajesh Kumar Singh

கூடிய விரைவில், கூடுதல் வசதிகளோடு இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.