திலேப்பியா மீன் வளர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 21-ம் தேதி ‘புறக்கடையில் கோழி வளர்ப்பு’, 22-ம் தேதி ‘இயற்கை உரங்கள் உற்பத்தி’, 26-ம் தேதி ‘திலேப்பியா மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 99405 42371.
சுருள் பாசி
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘கால்நடை தீவன சாகுபடி முறைகள்’, 20-ம் தேதி ‘தென்னை நாற்று உற்பத்தி மற்றும் பராமரிப்பு’, 21-ம் தேதி ‘மூலிகைப் பயிர்கள் சாகுபடி’, 26-ம் தேதி ‘பட்டுப்புழு வளர்ப்பு’ 29-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.
வாழ வழி மாநாடு
தமிழ்நாடு இயற்கை உழவர்களின் கூட்டமைப்புச் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பாப்பா நாடு, மாணிக்கம் மஹாலில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், ‘வாழ வழி’ இயற்கை வழி வேளாண்மை மாநாடு-3 நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், இயற்கை வேளாண்மை பயிறுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். ஒருங்கிணைப்பு: அகவெளி வாழ்வியல் நடுவம்.
தொடர்புக்கு, செல்போன்: 77085 14414.
மண்ணும் மரபும்
காந்தி உலக மையத்தின் சார்பில் ஜூலை 22, 23 மற்றும் 24 தேதிகளில், கும்முடிபூண்டி, M.V பாரடைஸ் வளாகத்தில், ‘மண்ணும் மரபும்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளின் நேரடி சந்தை, நெல் மற்றும் மரபு விதைகள் காட்சிப்படுத்தல், பாரம்பர்ய உணவு வகைகள், கால்நடைகளின் அணிவகுப்பு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொடர்புக்கு, செல்போன்: 90430 21069
மண் வகைச் சீர்திருத்தம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை 26-ம் தேதி ‘மண் வகைச் சீர்திருத்தம் முறைகள்’ பயிற்சி இலவசமாக நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.
சுபாஷ் பாலேக்கர் பண்ணை பார்வையிடல்
சுபாஷ் பாலேக்கர் பண்ணை பார்வையிடல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகர், ஷீரடி சாய்பாபா கோயில் டிரஸ்ட் மூலம் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை (ஜீரோ பட்ஜெட்) பண்ணை பார்வையிடல் மற்றும் பயிற்சி முகாம், ஆகஸ்ட் 18, 19, 20, 21, 22 தேதிகளில் நடைபெற உள்ளது. அகமது நகர், புனே பகுதிகளைச் சுற்றியுள்ள சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறை மூலம் சாகுபடி செய்து சாதனை படைக்கும் பண்ணைகளை நேரில் பார்த்துப் பயன்பெறலாம். ஐந்து நாள்களுக்கும் உணவு, தங்குமிடம், வாகன வசதி உள்ளிட்ட செலவுகளுக்குப் பங்கேற்பு கட்டணம் உண்டு.
தொடர்புக்கு, செல்போன்: 96731 62240.