Published:Updated:

மானியம் பெற உதவும் பட்டா, சிட்டா..!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

மானியம் பெற உதவும் பட்டா, சிட்டா..!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘மூன்று நண்பர்கள் இணைந்து 6 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்யவுள்ளோம். பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன? அரசு மானியங்கள் பெற நிலத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங்களில் பெயர்களை எப்படி பதிவு செய்ய வேண்டும்?

- @தினேஷ்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குநர் பொ.வேல்முருகன் பதில் சொல்கிறார்.

‘‘நிலத்தின் உரிமையாளர் யார் என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப் பட்டிருக்கும். அந்த நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறை அளிக்கும் சான்றி தழ்தான் பட்டா.

சிட்டா என்பது ஒருவருக்குக் குறிப் பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம், அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும் நிலத்துக்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப் பட்டிருக்கும். குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் என்பதுதான் சிட்டா.

விவசாயம்
விவசாயம்


அடங்கல் என்பது ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு தான் ‘அடங்கல்’. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன, நிலம் எந்தப் பகுதியில் உள்ளது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

சிறு, குறு விவசாயி பிரிவில் மானியம் பெற வேண்டும் என்றால், 5 ஏக்கர் அளவுக்குள் நிலம் இருக்க வேண்டும். நீங்கள் மூன்று நண்பர்களும் தலா இரண்டு ஏக்கர் என்று பிரித்து, பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங் களில் பதிவு செய்துகொண்டால் மட்டுமே சிறு, குறு விவசாயி பிரிவில் வருவீர்கள். நிலம் பிரிக்கப்படாமல் மொத்தமாக மூன்று நபர்கள் பெயரில் ஆவணங்கள் இருந்தால், பெரிய விவசாயிகள் பிரிவில் வருவீர்கள். உதாரணத்துக்குச் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவிகிதத்திலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு, 75 % மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொடுக் கப்படுகிறது. எனவே, நிலத்தின் அளவுகளை வைத்துதான் அரசு மானியங்களும் சலுகை களும் வழங்கப்படுகின்றன.’’

தொடர்புக்கு, பொ.வேல்முருகன்,

செல்போன்: 99524 17105.


‘‘உளுந்து சாகுபடி செய்ய விரும்புகிறேன். எந்த ரகம் ஏற்றது, சாகுபடி நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

- @வி.லட்சுமிபதி

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

வேல்முருகன், ராமகிருஷ்ணன்
வேல்முருகன், ராமகிருஷ்ணன்


“எங்கள் ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப் பட்ட வம்பன் ரக உளுந்து குறைந்த நாள்களில், அதாவது 75 நாள்களில், நல்ல லாபத்தைத் தரக்கூடியது. இந்த ரகங்கள் மஞ்சள் தேமல் நோய்க்கு முற்றிலும் எதிர்ப்புத் திறன் கொண்டவை. சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனுடையவை. ஒரு சேர முதிர்ச்சி பெரும் தன்மையுடையவை. ஒருமித்துக் காய்ப்பதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றவை. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட் டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம்.

ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் 300 கிராம் ரைசோபியம் மற்றும் 300 கிராம் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதை 15 - 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, பின்பு விதைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன்பு, தலா 2 கிலோ ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து கடைசி உழவின்போது நிலத்தில் தூவி விட வேண்டும். பின்பு, வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். விதைத்தவுடன் ஒரு பாசனமும், மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் அவசியம் பாய்ச்ச வேண்டும். பிறகு, கால நிலை மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து 7 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும்போதும் காய்க்கும்போதும் நிலத்தைக் காயவிடாமல் பார்த்துக் கொள் வதோடு, களையிருந்தால் அதை எடுத்து விட வேண்டும்.

உளுந்து
உளுந்து


பரிந்துரைக்கப்பட்ட அளவில் உரம் இட வேண்டும். வம்பன் - 11 ரகம் ஒருமித்த முதிர்ச்சியுறும் தன்மை உடையதால், ஒரே சமயத்தில் அறுவடை செய்யலாம். காய்கள் 80 சதவிகிதம் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

ஒரு செடியில் 60 - 80 காய்களும், ஒரு காயில் சராசரியாக 6 - 8 விதைகளும் கிடைக்கும். சராசரியாக 600 கிலோ மகசூல் கிடைக்கிறது. நல்ல பராமரிப்பு மூலம் இதே ரகத்தில் ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் எடுத்த விவசாயிகளும் உள்ளனர். விதைகள் தேவைப்படும் விவசாயிகள் எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.’’

தொடர்புக்கு,

செல்போன்: 63804 88348

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘சூரிய ஒளி மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்யலாம் என்று கேள்விப்பட்டேன். இந்தத் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?’’

ஆர்.புண்ணியமூர்த்தி, தலைஞாயிறு.

‘‘மத்திய, மாநில அரசால் 60 சதகிவித மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் சோலார் பம்ப் செட் (11 கிலோ வாட் வரை) அமைத்துத் தரப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்பட மாட்டாது. இலவச மின்சாரமும் ரத்து செய்யப்பட மாட்டாது. இலவச மின்சாரத் தைப் பயன்படுத்துவதோடு, சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால், மின்சாரம் சிக்கனம் செய்யப்படுகிறது.

விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக, மீதமுள்ள சூரிய ஒளி மின்சாரமானது கணக்கிடப்பட்டு, அதைத் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து, அதற்கான தொகை மாதந்தோறும் விவசாயி களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசு மானியம் 60 சதவிகிதம் போக, 40 சத விகிதத் தொகையினை விவசாயிகள் பங்கு தொகையாகச் செலுத்த வேண்டும். இதைச் செலுத்த முடியாத விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற்றுத் தர அரசு ஏற்பாடு செய்கிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெற, திட்டம் தொடர்பான விருப்ப கடிதம், மின் இணைப்பு கணக்கு அட்டை, மோட்டார் திறன் உள்ளிட்டவை விவரங்களுடன், உங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை அணுகவும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism