Published:Updated:

அரிசி கொள்முதல் செய்யவில்லையென்றால் விவசாயம் அழியும்; தெலங்கானா முதல்வர் போராட்டம் உணர்த்தும் உண்மை

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போராட்டம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடும் வறட்சி நிலவியது. பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால், கடும் பஞ்சம் ஏற்பட்டு அப்பகுதி விவசாயிகள், வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள்.

அரிசி கொள்முதல் செய்யவில்லையென்றால் விவசாயம் அழியும்; தெலங்கானா முதல்வர் போராட்டம் உணர்த்தும் உண்மை

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடும் வறட்சி நிலவியது. பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால், கடும் பஞ்சம் ஏற்பட்டு அப்பகுதி விவசாயிகள், வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள்.

Published:Updated:
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போராட்டம்

தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட அரிசி முழுவதையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில முதல்வர் சாந்திரசேகர ராவ், டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, நாடு முழுவதும் பேசுபொருளானது. இப்போராட்டத்தில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்தப் போராட்டத்தில் உரையாற்றிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ``நடப்பு ரபி பருவத்தில் தெலங்கானா விவசாயிகள் உற்பத்தி செய்த 15 லட்சம் டன் அரிசியை வாங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. நான் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயலுக்கு சொல்கிறேன்...

போராட்டத்தில்
போராட்டத்தில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தயவுசெய்து எங்களின் உணவு தானியங்களை வாங்குங்கள். நான் உங்களுக்கு 24 மணிநேரம் கால அவகாசம் தருகிறேன். அப்படி இல்லாவிட்டால் அதன் பிறகு, நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம். மீண்டும் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கும். விவசாயிகளின் உணர்வுகளுடன் பிரதமர் மோடி விளையாடக் கூடாது. விவசாயிகள் நினைத்தால் அரசைக் கவிழ்க்க முடியும். இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன" என்று காட்டமாகப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், மத்திய அரசின் உணவு தானிய கொள்முதல் கொள்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``மாநில அரசுகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி, மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்கி வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு குறிப்பிட்ட அளவு நெல்லைதான் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயம் செய்கிறது. இது மிகவும் தவறான விதிமுறை. இது மாநில உரிமையைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல்.

சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், ஏராளமான வரி வருமானம் மத்திய அரசுக்குச் செல்கிறது. அனைத்து மாநிலங்களின் விவசாயிகள் நலனில் அக்கறை காட்டுவது மத்திய அரசின் கடமையாகும். வேளாண்மை ஒன்றுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம். தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்தால்தான் விவசாயிகளால் வாழ முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமையை முழுமையாகக் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் அனைத்து விளைபொருள்களுக்குமே குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அரசு, இதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. 2020-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில விவசாயிகள் கூடுதலாக உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய மாட்டோம் என மத்திய அரசு பிடிவாதம் செய்தது. அம்மாநில அரசு, தொடர்ச்சியாக அரசியல் அழுத்தம் கொடுத்த பிறகே, கூடுதல் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட அரிசியைக் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது, மனிதநேயமற்ற செயலாகும். தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடும் வறட்சி நிலவியது. பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால், கடும் பஞ்சம் ஏற்பட்டு அப்பகுதி விவசாயிகள், வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

இந்தச் சூழலில்தான் அங்கு நிலவிய வறட்சியைப் போக்க அந்த மாநில அரசு, காளேஸ்வரம் நீரேற்றுத் திட்டத்தை செயல்படுத்தியது. கோதாவரி நதியின் வழியாகக் கடலில் கலக்கும் நீரை, மலைக் குடைவு-நீர் மேல் ஏற்று தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய, காளேஸ்வரம் திட்டத்தைச் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தின் மூலம் தெலங்கானா மக்களின் குடிநீர் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருவதோடு, புதிதாக 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

இதனால் அந்த மாநிலத்தின் நெல் உற்பத்தி, இருமடங்காக உயர்ந்துள்ளது. கிழக்கு கோதாவரியிலிருந்து புலம்பெயர்ந்து போன விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு மீண்டும் அங்கு சென்றுள்ளார்கள். அம்மாநிலத்தில் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை, மத்திய அரசு கொள்முதல் செய்ய மறுப்பதென்பது, அங்குள்ள விவசாயிகளின் எதிர்கால நம்பிக்கையை சிதைப்பதாகும். தேவைக்கு அதிகமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டால், அதை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். குறிப்பாக, உணவின்றி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, இதை அனுப்பி உதவிக்கரம் நீட்டலாம்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism