Published:Updated:

விவசாயிகள் சந்தையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்... இதனால்தான் டெல்லிப் போராட்டம்!

தேவிந்தர் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
தேவிந்தர் சர்மா

விளக்குகிறார் வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா...

விவசாயிகள் சந்தையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்... இதனால்தான் டெல்லிப் போராட்டம்!

விளக்குகிறார் வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா...

Published:Updated:
தேவிந்தர் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
தேவிந்தர் சர்மா

அலசல்

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்துவிட்ட பிறகும், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் நிலவும் தேக்க நிலையைக் கண்டு தனது ஆழ்ந்த வருத்தத் தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதற்கிடையே விவசாயிகளின் போராட்டம் குறித்து அனைத்து வழக்கு களையும் விசாரிக்க முன்வந்துள்ளது. இப்போராட்டம் குறித்துச் சாதகமாகவும் எதிராகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தச் சட்டம் விவசாயிகளுக்குச் சாதக மானது என்றும், அது விவசாயிகளுக்கு உகந்ததல்ல என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நாட்டின் தலைநகரில் நடப்பது என்ன? எலும்பை ஊடுருவும் குளிரிலும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடாது தொடர்வது ஏன்? இப்பிரச்னையின் அடிப்படை என்ன? இதுகுறித்து டெல்லியில் உள்ள உணவு மற்றும் வர்த்தக கொள்கை ஆய்வாளரும் வேளாண் நிபுணரு மான தேவிந்தர் சர்மாவுடன் நேர்காணல் நடத்தியது பசுமை விகடன். பத்திரிகையாளர், எழுத்தாளர், வேளாண் விஞ்ஞானி், பேராசிரியர்... எனப் பன்முகம் கொண்ட இவரின் கனமான நேர்காணல் பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் நடந்த அந்த உரையாடலின் மொழியாக்கம் இங்கே இடம்பெறுகிறது.

விவசாயி
விவசாயி

‘‘‘வேளாண் சட்டங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் பெறும் நன்மைகள், நுகர்வோர் பெறும் நன்மைகளைப் பாருங்கள். மண்டி மற்றும் இடைத்தரகர்களின் கட்டுப் பாட்டிலிருந்து விவசாயிகள் விடுதலை அடைந்துள்ளார்கள். மண்டியில் தங்கள் விளை பொருள்களை விற்பதற்கு விவசாயிகள் 8 சதவிகித வரி கட்டு கிறார்கள். இடைத்தரகர்கள் இல்லையென்றால் விவசாயி களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம். அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும். திறந்தவெளிச் சந்தை விற்பனைமூலம் விவசாயிகள் முழுப் பலனைப் பெற முடியும்’ இது போன்ற பல வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலோட்ட மாகப் பார்த்தால் இவை உண்மை போலத் தோன்றும்.

‘மதர் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில், இடைத்தரகர் வில்லனாகச் சித்திரிக்கப்படுவார். சாதாரண மனிதனைக் கேட்டால் இடைத்தரகர்கள் விவசாயிகளைச் சுரண்டுகின்றனர் என்பர். ஆனால் அதன் பின்னால் இருக்கும் சில சூட்சுமங்களைக் கூர்ந்து கவனிக்க நாம் தவறிவிடுகிறோம். யார் இடைத்தரகர்? இதை நாம் கவனிக்க வேண்டும். குர்தா அணிந்த இடைத்தரகரை நாம் எதிர்க்கிறோம். கோட் அணிந்த இடைத்தரகரை நாம் நேசிக்கிறோம். இதில் நாம் ஏன் வேறுபடுகிறோம்.

சந்தைமூலம் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. சந்தை மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் வால்மார்ட் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிய சக்தி வாய்ந்த இடைத்தரகர்களாக வலம் வருகின்றன. அவர்கள் எவ்வளவு இருப்பு வைத்துள்ளார்கள் என்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனாலும் நாம் அவர்களை நம்புகிறோம்.

தேவிந்தர் சர்மா
தேவிந்தர் சர்மா

மேலும் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கடந்த தசாப்தங்களில் விவசாயிகளின் வருமானம் அந்நாடுகளில் கணிசமாகக் குறைந்து வருகிறது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் விவசாயிகள் அதிக எண்ணிக் கையில் தற்கொலை செய்து கொள் கின்றனர் என்றால் ஆச்சர்யப் படுவீர்கள். எதனால் தற்கொலை செய்கிறார்கள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இடைத்தரகர்களின் தூண்டுதலால்தான் போராட்டம் நடைபெறுகிறது என்று பிரசாரம் செய்யப்படுகிறது. தற்போது டெல்லியில் குளிர் 1.1 டிகிரி செல்சியஸ், அதாவது குளிர் உறை நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சிம்லாவைவிட அதிகமாக உள்ளது. கடுமையான குளிரில் போராட யாரையாவது நாம் கட்டாயப்படுத்த முடியுமா? டெல்லியில் இதுவரை 47 பேர் குளிரால் இறந்துள்ளனர். உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டிய அவசியம் என்ன?

இந்தப் பிரச்னையின் ஆழம் குறித்துப் பொருளாதாரச் சீர்திருத் தங்களால் பயனடைபவர்கள் கவலைப்பட மாட்டார்கள். விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? பயிர் நாசம், இயற்கைச் சீற்றம், பேரழிவு, விவசாயத்தில் நஷ்டம் ஆகியவை முக்கியக் காரணிகள். எவ்வளவு காலத்துக்கு நஷ்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியும். வருமானம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம். உங்களது வருமானமே உங்களது வாழ்வு நிலை, கல்வி மற்றும் வசதி வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது.

கடந்த காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை நான் கணக்கிட்டேன். 1970-ம் ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமைக் கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.76, நெல்லுக்கான விலை ரூ.51. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, 2015-ம் ஆண்டு ஒரு குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,450. இது 19 மடங்கு உயர்வு. மிகவும் அதிகமாகத் தோன்றும். ஆனால், வருமான சமநிலை கோட்பாட்டின்படி (income-parity-norms) நாம் சரியாகப் புரிந்துகொள்ள, மற்றவர்களின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த 45 ஆண்டுகளில், அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி 120 முதல் 150 மடங்கு உயர்ந்துள்ளது. பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் 280 முதல் 300 மடங்கு அதிகரித் துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களின் ஊதியம் 150 முதல் 175 மடங்கு வரை கூடியுள்ளது. ஆனால், விவசாயி களின் வருமான உயர்வு வெறும் 19 மடங்குதான்.

இது போன்ற குறைவான ஊதிய உயர்வு பேராசிரியர்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டிருந்தால் நாட்டில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும். பலர் இப்பணியை விட்டு விலகிச் சென்றிருப்பார்கள். விவசாயிகள் வேண்டு மென்றே ஏழைகளாக நாட்டில் வைக்கப் பட்டிருந்தாலும்கூட, விவசாயிகள் உணவுப்பொருள் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறார்கள். கொடிய கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். சில தொழில்களையும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி யிருக்கிறார்கள்.

தேவிந்தர் சர்மா
தேவிந்தர் சர்மா
இந்தப் போராட்டம் இன்று ஒருநாளில் திடீரென்று எழுந்ததல்ல. பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த குமுறல்களின் வெளிப்பாடு.

ஆனால் பெரும்பான்மையான விவசாயிகள் பசியால் வாடுகின்றனர். பலர் பட்டினி பட்டியலின் கீழ் இருக்கிறார்கள். இருந்தும் நாட்டு மக்களுக்குச் சலுகை விலையில் உணவைத் தொடர்ந்து வழங்கு கிறார்கள். இந்த அவல நிலையை விவசாயிகள் மேலும் தொடர முடியாது.

நாட்டில் அனைவருக்கும் ஊதிய உத்தரவாதம் உள்ளது. ஆனால், விவசாயிகள் மட்டும் சந்தையை நம்பியிருக்கிறார்கள். சந்தைகள் அற்புதமாகவும் திறமையாகவும் இருந் திருந்தால், விவசாயிகளுக்கு எதற்காக நெருக்கடி ஏற்படுகிறது? இந்த நெருக்கடி நிலை உலகம் முழுவதும் நிலவுகிறது.

இந்தப் போராட்டம் இன்று ஒருநாளில் திடீரென்று எழுந்ததல்ல. பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த குமுறல்களின் வெளிப்பாடு. நாட்டில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் அமலில் உள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு மட்டும் உற்பத்திக் கான குறைந்தபட்ச விலை ஏன் இல்லை. நான் நாட்டின் அனைத்து விவசாயிகள் குறித்தும் பேசுகிறேன். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை பெற உரிமை உண்டு. நாட்டில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் இருக்கும்போது, விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச விலை ஏன் இருக்கக் கூடாது?

அமெரிக்கா விவசாயிகளின் இன்றைய நிலை, குறைந்தபட்ச ஆதார விலை ரத்துச் செய்யப்பட்ட பீகார் மாநிலத்தின் இன்றைய நிலை... போராடும் விவசாயிகளின் அறக் கோரிக்கை உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவை அடுத்த இதழில் தொடரும்...