Published:Updated:

முதல்வர் ஆய்வுக்காகத் தூர்வாரப்பட்ட இடத்திலேயே மீண்டும் தூர்வாரும் பொதுப்பணித்துறை?

தூர் வாரும் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

முதல்வர் வருவதற்கு முன்னதாகவே 3 ஜே.சி.பி இயந்திரங்கள் தூர்வாரப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூர்வாரியதுடன், பலப்படுத்தப்பட்ட கரைகளை மீண்டும் சரி செய்துகொண்டே இருந்தனர்.

முதல்வர் ஆய்வுக்காகத் தூர்வாரப்பட்ட இடத்திலேயே மீண்டும் தூர்வாரும் பொதுப்பணித்துறை?

முதல்வர் வருவதற்கு முன்னதாகவே 3 ஜே.சி.பி இயந்திரங்கள் தூர்வாரப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூர்வாரியதுடன், பலப்படுத்தப்பட்ட கரைகளை மீண்டும் சரி செய்துகொண்டே இருந்தனர்.

Published:Updated:
தூர் வாரும் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் வந்தடைந்த பிறகு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணை திறக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் ஒழுக்காக சென்றடைகிறதா என்பதைப் பார்க்க தூர்வாரிய இடங்களில் பார்வையிட்டார்.

தூர் வாரும் பணிகள் ஸ்டாலின் ஆய்வு
தூர் வாரும் பணிகள் ஸ்டாலின் ஆய்வு

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் உள்ள பீமனோடை பாசன வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நடைபெற்றிருந்த தூர்வாரப்பட்ட பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கு தடையின்றி கடைமடை வரை தண்ணீர் செல்கின்ற வகையில் தமிழக அரசு சிறப்பு தூர்வாரும் பணிகளை அறிவித்தது. அதன்படி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் காவிரி, கல்லணை கால்வாய் உள்ளிட்ட வடிநில கோட்டங்களில் மொத்தம் ரூ.80 கோடி மதிப்பில் 4,965 கிலோமீட்டர் தூரம் 683 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 1,386 கிலோமீட்டர் தூரத்துக்கு 170 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறதா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்ய இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி அம்மாப்பேட்டை அருகே உள்ள பீமனோடை பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணியை முதல்வர் பார்வையிட்டார்.

தூர் வாரும் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
தூர் வாரும் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்ட பிறகு, அப்பகுதியிலிருந்த பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையிலான விவசாயிகள், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும், தரமான விதைகள், உரம் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் பார்வையிட்ட பீமனோடை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 17-ம் தேதி முடிவடைந்ததாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், முதல்வர் வருவதற்கு முன்னதாகவே 3 ஜே.சி.பி இயந்திரங்கள் தூர்வாரப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூர்வாரியதுடன், பலப்படுத்தப்பட்ட கரைகளை மீண்டும் சரி செய்துகொண்டே இருந்தனர். எதற்காக இந்த ஏற்பாட்டை அதிகாரிகள் செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதனால் அரசு பணம்தான் விரயமாகிறது என அப்பகுதி விவசாயிகள் புலம்பியதையும் கேட்க முடிந்தது.

பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஜே.சி.பி இயந்திரங்கள்
பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஜே.சி.பி இயந்திரங்கள்

தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே புதிதாகத் தூர்வாரப்பட்ட இடங்களாகக் காட்டி வருகின்றனர் பொதுப்பணித்துறையினர் என்று புலம்புகிறார்கள் டெல்டா விவசாயிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism