Published:Updated:

டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக நம்மாழ்வார் சொல்லிய சூப்பர் தீர்வு! அரசு பரிசீலிக்குமா?

அடியுரம் போட டி.ஏ.பி கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி தேவையே இல்லங்கறதுதான் உண்மை.

டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக நம்மாழ்வார் சொல்லிய சூப்பர் தீர்வு! அரசு பரிசீலிக்குமா?

அடியுரம் போட டி.ஏ.பி கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி தேவையே இல்லங்கறதுதான் உண்மை.

Published:Updated:

கடந்த சில ஆண்டுகளாகவே ரசாயன உரங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் உச்சமாக ரசாயன உரப் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் டி.ஏ.பி என்கிற அடியுரம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  ``தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி உரத்தையே அடியுரமாகப் பயன்படுத்துகிறார்கள். டி.ஏ.பி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை  உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டி.ஏ.பி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டி.ஏ.பி உரங்கள் வெளி நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறக்குமதியின்போது ஏற்படும் பிரச்னைகளால் டி.ஏ.பி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடியுரமாக இட ஒன்றிய உரத்துறை அறிவுறுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனி வரும் காலங்களில் ரசாயன உரங்களுக்கான தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். சரி... இந்த டி.ஏ.பி-க்கு மாற்றாக வேறு உரம் இல்லையா என்ற கேள்வி எழும். பசுமை விகடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து எழுதி வருகிறது. அதோடு பயிற்சியும் வழங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று டி.ஏ.பி பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது பசுமை விகடன் சார்பில் திருவாரூரில் கூட்டம் நடத்தப்பட்டது. டி.ஏ.பி-க்கு மாற்றாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் நடைபெற்றது. நம்மாழ்வார் சொல்லிய யோசனையைச் செயல்படுத்தியிருந்தார் முருகமங்கலம் `லயன்ஸ்' சம்பந்தம் பிள்ளை என்ற விவசாயி. அந்தக் கூட்டத்தில் விவசாயி சொல்லிய தீர்வு இதுதான்.

 நம்மாழ்வார்
நம்மாழ்வார்

``அடியுரம் போட டி.ஏ.பி கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம், வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சு கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும். நான் இதை மட்டும்தான் அடியுரமா பயன்படுத்துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.

நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சு விதை தெளிக்கணும். 15 நாள்லயே ஒரு சாண் உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும். சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டு சால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சு நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும்.

நெய்வேலி காட்டாமணக்கு
நெய்வேலி காட்டாமணக்கு

பூச்சி, நோய், களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலா கிடைக்குது. இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை `விஷச்செடி’னு சொல்றது அறியாமை. இது ஒரு அருமையான உரச்செடி... இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்’’ என்று சொன்னதும் விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.